You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

TNAU UG ADMISSION 2023 Latest News | tnagfi.ucanapply.com | வேளாண்மை பல்கலைக்கழகம் அட்மிஷன் 2023

TNAU UG Admission Notification 2024

TNAU UG ADMISSION 2023 Latest News | tnagfi.ucanapply.com | வேளாண்மை பல்கலைக்கழகம் அட்மிஷன் 2023

TNAU UG ADMISSION 2023 Latest News

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயமுத்தூர் மற்றும் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம், நாகப்பட்டினம் இந்த கல்வியாண்டு முதல் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகத்திற்கும் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைகழகத்திற்கும், ஒரே விண்ணப்பம் வழியாக மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. நூற்றாண்டு பெருமைமிக்க தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகத்தில் இந்த கல்வியாண்டில் இளமறிவியல் 14 பாடப்பிரிவுகளுக்கும், 3 பட்டயப்படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைகழகத்தில் 6 இளமறிவியல் பாடப்பிரிவுகளுக்கும் மற்றும் மூன்று தொழில்முறை பாடப்பிரிவுகளுக்கும் ஒருமித்த வகையில் சேர்க்கை நடைபெற உள்ளது.

Read Also: TNAU MSc and MTech Admission 2023

மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களை http://tnau.ucanapply.com, பொதுப்பிரிவு (OC). பிற்படுத்தப்பட்டோர் (BC) மற்றும் பிற்படுத்தப்பட்டோர் http://tnagfi.ucanapply.com என்ற இணையதள முகவரியில் பூர்த்தி செய்து, விண்ணப்பக் கட்டணத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் (இஸ்லாமியர்) BC(M) மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC)/DNC மாணவர்களுக்கு ரூபாய்.500/- மற்றும் ஆதிதிராவிடர் (SC), அருந்ததியர் (SCA) மற்றும் பழங்குடியினர் (ST) ரூபாய். 250/- மாணவர்கள் இணையதள விண்ணப்பங்களை 10.05.2023 முதல் www.tnagfi.ucanapply.com என்ற இணையதளத்தில் 09.06.2023 வரை பூர்த்தி செய்யலாம்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இணையதள www.tnau.ac.in. முகவரியில் மாணவர்களுக்கான வழிகாட்டுதல்கள், அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் மற்றும் மாணவர் சேர்க்கைக்கான வழிமுறைகள் உள்ளன. கலந்தாய்விற்குரிய தேதி மற்றும் அதற்குரிய செயல்முறைகள் அனைத்தும் உடனுக்குடன் இணையதளத்தில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

TNAU UNDERGRADUATE COURSE LIST

தமிழ்நாடு வேளாண்மைப் கீழ்காணும் 14 பட்டப்படிப்புகளை 18 உறுப்பு மற்றும் 28 இணைப்புக் கல்லூரிகள் மூலம் வழங்குகிறது.

வேளாண்மை அறிவியல் கல்வி பாடப்பிரிவுகள்

1. இளமறிவியல் (மேதமை) வேளாண்மை

2. இளமறிவியல்(மேதமை) தோட்டக்கலை

3. இளமறிவியல் (மேதமை) வேளாண்மை (தமிழ்வழி)

4. இளமறிவியல் (மேதமை) தோட்டக்கலை (தமிழ்வழி)

5. இளமறிவியல் (மேதமை) வனவியல்

6. இளமறிவியல் (மேதமை) உணவு, மற்றும் ஊட்டச்சத்து உணவு முறை

7. இளமறிவியல் (மேதமை) பட்டுவளர்ப்பு மற்றும்

8. இளமறிவியல் (மேதமை) வேளாண் வணிக மேலாண்மை

வேளாண்மை தொழில்நுட்ப கல்வி பாடப்பிரிவுகள்

9. இளம் தொழில்நுட்பம் (வேளாண் பொறியியல்)

10. இளம் தொழில்நுட்பம் (உணவுத் தொழில்நுட்பம்)

11. இளம் தொழில்நுட்பம் (உயிரித் தொழில்நுட்பம்)

12. இளம் தொழில்நுட்பம் (ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல்)

13. இளம் தொழில்நுட்பம் (உயிரித் தகவலியல்) மற்றும்

14. இளம் தொழில்நுட்பம் (வேளாண்மை தகவல் தொழில்நுட்பம்)

மாணவர் சேர்க்கைக்குரிய அனைத்து நடைமுறைகளும் இணையதள வாயிலாகவே நடைபெறும். பதினான்கு (14) இளமறிவியல் பட்டயப்படிகளுக்கு ஒரே ஒரு இணையவழி விண்ணப்பம் மட்டுமே போதுமானது. இக்கல்வியாண்டில் உறுப்பு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இடஒதுக்கீடு 3363 ஆகவும் மற்றும் இணைப்பு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான அரசாங்க இடஒதுக்கீடு 2806 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

TNAU Special Quota

1.சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீடு:

18 உறுப்பு கல்லூரிகளுக்கு தலா ஒரு இடம் வீதம் மொத்தம் 18 இடங்கள்

வழங்கப்படும்.

2.மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு இடஒதுக்கீடு :

உறுப்பு கல்லூரிகளில் நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் ஐந்து சதவீத இட ஒதுக்கீடு (மொத்தம் 125 இடங்கள்)

3. முன்னாள் இராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான இடஒதுக்கீடு:

18 உறுப்பு கல்லூரிகளுக்கு தலா ஒரு இடம் வீதம் மொத்தம் 18 இடங்கள் வழங்கப்படும்.

4. 7.5% அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கான இடஒதுக்கீடு :

மொத்தம் 463 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

5. தொழில்முறைக் கல்வி பாடப்பிரிவினருக்கான இடஒதுக்கீடு :

நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் ஐந்து சதவீத இட ஒதுக்கீடு (மொத்தம் 246 இடங்கள்)

(Supernumerary Quota)

சிறப்பு இடஒதுக்கீட்டு உடன் கூடுதலான இடஒதுக்கீடு

1. இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்திற்கான இடஒதுக்கீடு (ICAR 20%) நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் 20% வழங்கப்படுகிறது.

2. அந்தமான் மற்றும் நிகோபார் மாணவர்களுக்கு வேளாண்மையில் - 8 இடங்கள் மற்றும் தோட்டக்கலையில் - 5 இடங்கள் மொத்தம் - 13 இடங்கள்

3. இந்தியாவில் கல்வி கற்றல் (ICCR -Indian Council for Cultural Relations) (மொத்தம் 32 இடங்கள்) மற்றும்

4. ஐம்மு மற்றும் காஷ்மீர்க்கான இடஒதுக்கீடு (2 இடங்கள்)

TNAU ADMISSION PROCEDURE

இணையதள மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப நடைமுறைகள் பின்வரும் நிலைகளை கொண்டுள்ளது.

1.இணையதள பதிவு.

2.விண்ணப்பங்களை நிரப்புதல்,

3.தரவரிசைப்பட்டியல் வெளியீடு.

4.இணையவழி கலந்தாய்வு. .

5.இடஒதுக்கீடு

6.சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும்

7.நகர்வு முறை மற்றும் தற்காலிக இடஒதுக்கீடு

TNAU College Details