TNAU MSc and MTech Admission 2023 | வேளாண்மை பல்கலைக்கழகம் மாணவர் சேர்க்கை 2023
TNAU MSc and MTech Admission 2023
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் முதுநிலை பட்ட மேற்படிப்பு பயிலகம் வாயிலாக 11 கல்வி வளாகங்களில் 33 துறைகளில் முதுகலை படிப்பையும் 28 துறைகளில் முனைவர் பட்டப் படிப்பையும் வழங்குகிறது. 2023 -2024ஆம் கல்வி ஆண்டிற்கான முதுகலை மற்றும் முனைவர் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை செயல்முறை 19.4.2023 அன்று முதல் தொடங்குகிறது. இவ்வாண்டு மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் (
https://admissionsatpgschool.tnau.ac.in/) மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். 19.4.2023 அன்று முதல் தொடங்கி 15.5.2023 (நள்ளிரவு 11.59 மணி வரை) மட்டுமே விண்ணப்பதாரர்கள் இணையவழி வாயிலாக முதுகலை மற்றும் முனைவர் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.
Read Also: சென்னை பல்கலைக்கழகம் அட்மிஷன் 2023
இளமறிவியல் (வேளாண்மை ) மற்றும் அதன் சார்ந்த படிப்புகள் முடித்த மாணவர்கள் முதுகலை பட்டப்படிப்பிற்கும், முதுகலை (வேளாண்மை) அல்லது தோட்டக்கலை எம்.டெக் (வேளாண் பொறியியல்) முடித்த மாணவர்கள் முனைவர் பட்டப்படிப்பிற்கும் பட்டப்படிப்பு சான்றிதழ் ((Provisional Degree Certificate) சமா்ப்பிப்பதன் மூலமாகவும், தற்பொழுது இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் முந்தைய பருவ மதிப்பெண் சான்றிதழ் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். எனினும் பட்டப்படிப்பு சான்றிதழை சமர்ப்பித்த பின்னரே மாணவர் சேர்க்கை உறுதி செய்யப்படும்.
மேலும் விவரங்களுக்கு முதுநிலை மாணவர் சேர்க்கை (2023-24) குறித்த தகவல் கையேட்டை படிக்குமாறும் மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டு உரிய நேரத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறும் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
மாணவர் சேர்க்கை தொடர்பான ஐயப்பாடுகளுக்கு
pgadmission@tnau.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். நேரடியாக தொடர்பு கொள்ள 9489056710 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.