You are at the right place to read the latest education news today in
Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on
our website - TN Education Info.
TNAU RANK LIST 2022 PDF Download | TNAU RANK LIST 2022 OUT | tnau.ac.in | அக்ரி தரவரிசை பட்டியல்
TNAU RANK LIST 2022 PDF
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இன்று (செப்டம்பர் 30, 2022) துணைவேந்தா் கீதாலட்சுமி 12 இளமறிவியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிட்டுள்ளார்.
இதில் மாணவர்களிடம் ஜூன் 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 20ம் தேதி வரை இணையதளங்கள் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
TNAU RANK LIST 2022 OUT
இந்த தரவரிசை பட்டியலில் ஏழு மாணவர்கள் 200க்கு 200 கட் ஆப் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதில் 15,111 மாணவர்களும், 24,378 மாணவிகளும் விண்ணப்பித்திருந்தனர். 391 மாணவர்கள் முன்னாள் ராணுவத்தினர் பிரிவிலும், 7,773 அரசு பள்ளி மாணவர்களும், 144 மாற்றுதிறனாளிகள் பிரிவிலும், 1,849 மாணவர்கள் தொழிற்கல்வி பிரிவிலும் மற்றும் 808 மாணவர்கள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான பிரிவிலும் விண்ணப்பித்து உள்ளனர்.
மொத்த விண்ணப்பதாரர்கள் 1,226 மாணவர்கள் பொதுப்பிரிவிலும், 13,610 மாணவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பிலும், 11915 மாணவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவிலும், 794 மாணவர்கள் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமிய பிரிவிலும், 10,002 பட்டியல் இனத்தவர் பிரிவிலும், 1346 பட்டியல் இனத்தவர் (அருந்ததியர்) பிரிவிலும், பழங்குடியினர் பிரிவில் 596 மாணவர்களும் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் 18 உறுப்பு கல்லுாரிகளும், 28 தனியார் கல்லூரிகளும் உள்ளன. இதில் மொத்தம் 6,980 இடங்கள் உள்ளன. அரசு கல்லூரிகளில் ஒற்றைச் சாளர கலந்தாய்வின் மூலம் 2567 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இணைப்பு கல்லூரிகளில் அரசாங்க இடஒதுக்கீட்டில் ஒற்றைச்சாளர கலந்தாய்வு மூலம் 2,868 இடங்களும், நிர்வாக இடஒதுக்கீட்டின் மூலம் 1545 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
எந்தெந்த பிரிவில் இடங்கள்
தொழிற்கல்வி பயின்ற மாணவர்களுக்கு 247 இடங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு 129 இடங்களும், அரசாங்க பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 408 இடங்களும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு 20 இடங்களும் மற்றும் 20 இடங்கள் விளையாட்டு வீரர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
TNAU VC Geethalakshmi Press Meet
துணைவேந்தர் கீதாலட்சுமி இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக கலந்தாய்வு, முதற்கட்ட மருத்துவ கலந்தாய்வு பின்னர் நடத்தப்படும். இதுதொடர்பான அறிவிப்புகள் முறையாக மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும். கலந்தாய்வு ஆன்லைன் முறையில் மட்டுமே நடைபெறும், அரசு வழங்கியுள்ள இடஒதுக்கீடு அடிப்படையில் இந்த கலந்தாய்வு வெளிப்படையாக நடக்கும்.
இதுகுறித்து அவர் கூறும்போது, வேளாண் பல்கலைக்கழக கலந்தாய்வு தற்போது நடத்தினால், மாணவர்கள் மருத்துவ கலந்தாய்விற்கு செல்லக்கூடும். இதனால் மீண்டும் காலி பணியிடம் ஏற்படும்.
கட்-ஆப் மதிப்பெண் கூறும்போது, கடந்தாண்டு கடைசி கட் ஆப் மதிப்பெண்ணாக 185.50 பெற்றவர்கள் வரை அரசு கல்லூரியில் சேர்ந்துள்ளனர். இதேபோன்று, கடைசி கட் ஆப் மதிப்பெண்ணாக 179 கட் ஆப் மதிப்பெண் பெற்றவர்கள் தனியார் கல்லூரியில் சேர்ந்துள்ளனர். தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளில் சராசரியாக 181 கட் ஆப் மதிப்பெண் பெற்றவர்கள் சேர்ந்துள்ளனர். இதை உதாரணமாக வைத்துக்கொண்டு, மாணவர்கள் தங்கள் கட்-ஆப் வைத்து கணக்கிடலாம்.
இளங்கலை மற்றும் தோட்டக்கலை தமிழ் மீடியம் பிரிவில் 10 இடங்கள் கூடுதலாக அதிகரிக்கப்பட்டுள்ளன. இதில் சேர கிட்டதட்ட 10 ஆயிரம் மாணவர்கள் மேல் விண்ணப்பித்துள்ளனர்.
மாணவர்கள் தங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருப்பின் பல்கலைக்கழக இணையதளம் காணலாம் அல்லது உதவி எண்ணில் அழைக்கலாம். யூடிபில் வெளியாகும் காணொளிகளை அதிகாரப்பூர்வமான தகவல் என நம்ப வேண்டாம். அதேபோன்று கலந்தாய்வு குறித்து பொய்யான தகவல்களை வெளியிடும் யூடிபர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும், இவ்வாறு அவர் கூறியுள்ளார்.