You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

TNAU UG DIPLOMA ADMISSION 2022 Details| வேளாண்மை பல்கலைக்கழக பட்டயப்படிப்பு |அக்ரி டிப்ளமோ அட்மிஷன்

TNAU Spot Admission 2023  

TNAU UG DIPLOMA ADMISSION 2022 Details | வேளாண்மை பல்கலைக்கழக பட்டயப்படிப்பு | வேளாண்மை டிப்ளமோ அட்மிஷன்

TNAU UG DIPLOMA ADMISSION 2022

Admission to Diploma in Agriculture | Horticulture | Agricultural Engineering | பட்டயப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை 2022-2023 அறிவிப்பு

வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியில் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் (புதன் கிழமை 7.9.2022) ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றன.

படிப்புகாலம்

2 ஆண்டுகள் (நான்கு பருவங்கள்/ Four Semester)

பட்டயப்படிப்பில் சேருவதற்கான தகுதிகள்

  • வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பட்டயப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க பிளஸ் 2 வகுப்பில் இயற்பியல், வேதியியல் பாடங்களுடன் உயரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களை பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • வேளாண்மை பொறியியல் பட்டயப்படிப்புக்கு விண்ணப்பிக்க பிளஸ் 2 வகுப்பில், இயற்பியல், வேதியியல் பாடங்களுடன் கணிதம் பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • தொழிற்கல்வி பாடப்பிரிவில், உயிரியல் மற்றும் வேளாண்மை செயல்முறை பாடங்களை பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • சேர்க்கைக்கான தகுதிகளை அறிந்துகொள்ள பட்டயப்படிப்பிற்கான தகவல் கையேட்டினை பார்க்கவும்

Read Also: TNAU RANK LIST RELEASE DATE ON SEPTEMBER 10

பட்டயப்படிப்பு வழங்கும் உறுப்பு கல்வி நிறுவனங்கள்

வேளாண்மை

  1. வேளாண் கல்வி நிலையம், வேளாண்மை பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், குமுளுர், திருச்சி மாவட்டம். தொலைபேசி எண் 0431-2910340
  2. வேளாண் கல்வி நிலையம், தேசிய பயறு ஆராய்ச்சி நிலையம், வம்பன் -622 303, புதுக்கோட்டை மாவட்டம். தொலை பேசி எண் 04322-205745 (தமிழ்வழி கல்வி)

தோட்டக்கலை

  1. தோட்டக்கலை கல்வி நிலையம், தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், பேச்சிப்பாறை 629 161, கன்னியாகுமரி மாவட்டம், தொலைபேசி எண் 04651-281191/92.

வேளாண்மை பொறியியல்

  1. வேளாண் கல்வி நிலையம், வேளாண்மை பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், குமுளுர், திருச்சி மாவட்டம், தொலைபேசி எண் 0431-2910340

இணைப்பு (அரசு கல்வி நிறுவனங்கள்)

1)தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம், தளி - 635118, கிருஷ்ணகிரி மாவட்டம், அலைபேசி எண் -  8667388566, 9361615687, 9655322941, 9597202629.

2)காய்கறி மகத்துவ மையம், ரெட்டியார்சத்திரம், திண்டுக்கல் மாவட்டம், 624 004 அலைபேசி எண் 7373391383, 9843533689,8778070730

3) தமிழ்நாடு தோட்டக்கலை மேலாண்மை நிறுவனம், மாதவரம் 600051, திருவள்ளுவர் மாவட்டம், அலைபேசி எண் 8122827110, 8148668924

இணைப்பு (தனியார்) கல்வி நிறுவனங்கள்

வேளாண்மை

  1. இராமகிருஷ்ணன் மிஷன் வித்யாலயா, கோவை தொலைபேசி எண் 0422-2692540 (ஆண்கள் மட்டும்)
  2. சகாயத்தோட்டம் வேளாண் கல்வி மற்றும் ஊரக வளர்ச்சி நிலையம், தக்கோலம், வேலூர் மாவட்டம், தொலைபேசி எண் 04116 – 27655927
  3. வானவராயர் வேளாண் கல்வி நிலையம், பொள்ளாச்சி, கோவை மாவட்டம், தொலைபேசி எண் 04253-290147/127
  4. ஆதிபராசக்தி வேளாண்மை கல்லூரி, கலவை, இராணிப்பேட்டை மாவட்டம், தொலைபேசி எண் 04173-295050
  5. பி.ஜி.பி வேளாண் கல்லூரி, நாமக்கல், தொலைபேசி எண் 04286-267592
  6. அரவிந்தர் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, திருவண்ணாமலை மாவட்டம், தொலைபேசி எண் 04181-241799/202099
  7. ராகா வேளாண் கல்வி மற்றும் ஊரக வளர்ச்சி நிலையம், கோவில்பட்டி, தொலைபேசி எண் 04632-220612
  8. எம்ஐடி வேளாண்மை பட்டயக்கல்லூரி, வெள்ளாளப்பட்டி அஞ்சல், முசிறி வட்டம், திருச்சி மாவட்டம், அலைபேசி எண் 9965359546

தோட்டக்கலை

1)ஆதிபராசக்தி தோட்டக்கலை கல்லூரி, கலவை, இராணிப்பேட்டை மாவட்டம், தொலைபேசி எண் 04173-290505

2) எம்ஐடி வேளாண்மை பட்டயக்கல்லூரி, வெள்ளாளப்பட்டி அஞ்சல், முசிறி வட்டம், திருச்சி மாவட்டம், அலைபேசி எண் 9965359546

பயிற்றுமொழி

மேற்கூறிய அனைத்து வேளாண் கல்வி நிலையங்களில் (வம்பன் தவிர) ஆங்கிலம் பயிற்றுமொழியாக பயிற்றுவிக்கப்படுகிறது. வேளாண் கல்வி நிலையம், வம்பனில் மட்டும் தமிழ்மொழி பயிற்றுமொழியாக பயிற்றுவிக்கப்படுகிறது.

விண்ணபிக்கும் முறை

விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில்  உள்ள விண்ணப்பத்தினை (இங்கே கிளிக் செய்க) இணைதய வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்

விண்ணப்ப கட்டணம்

விண்ணப்ப கட்டணம் பொதுப்பிரிவினருக்கு ரூ.200, ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் அருந்ததியர், பழங்குடியினர் மாணவர்களுக்கு ரூ 100 மாணவர்களின் இணையதளம் மூலமாகவே விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

முக்கிய தேதிகள்

இணையதள மூலம் விண்ணப்பிக்கும் நாட்கள் 07.09.2022
விண்ணப்பிக்க கடைசி நாள் 10.10.2022
தரவரிசை பட்டியல் வெளியிடும் நாள்18.10.2022

மேலும் விவரங்களுக்கு