TNAU RANK LIST 2022 | TNAU RANK LIST RELEASE DATE ON SEPTEMBER 10 | வேளாண் பல்கலைக்கழக தரவரிசை பட்டியல்
இளங்கலை பாடத்திற்கான தரவரிசை பட்டியல் செப்டம்பர் 30ம் தேதி வெளியிடப்படுகிறது - இங்கே கிளிக் செய்க
TNAU RANK LIST 2022
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 12 இளங்கலை பட்டப்படிப்புகள், 14 அரசு கல்லூரிகள் மற்றும் 28 இணைப்பு கல்லூரிகளில் வழங்கப்படுகிறது. இதற்கு 2022-2023ஆம் கல்வியாண்டில் இளங்கலை பாடப்பிரிவுகளுக்கு கடந்த ஜூன் மாதம் முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. நடப்பாண்டில் வேளாண் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் 2,148 இடங்களும், இணைப்பு கல்லூரிகளில் 2,337 இடங்களும் உள்ளன. இந்த இடங்களுக்கு மொத்தம் 37,766 விண்ணப்பித்துள்ளனர். இதில் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் 800 பேர்.
Read Also: TNAU RANK LIST 2021
மேலும், மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், மருத்துவ கலந்தாய்வு உள்ளிட்ட நடவடிக்கை காரணமாக தற்போது தரவரிசை பட்டியல் வெளியீடு தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருவதாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்தார். தரவரிசை பட்டியல் வரும் 10ம் தேதி வெளியிடப்படும் என்றும், தரவரிசை பட்டியல் வெளியிட்ட பிறகு, மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், (செப்டம்பா் 1) சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தப்பட்டன. விளையாட்டு பிரிவு, மாற்றுதிறன் மாணவர்கள், முன்னாள் ராணுவத்தினர் வாரிசு உள்ளிட்ட சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு ஏற்கனவே தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளது. தரவரிசை பட்டியல் வரும் 10ம் தேதி வெளியிடப்படும். மேலும், நடப்பாண்டில் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படும் எனவும், நேரடி கலந்தாய்வு நடத்தப்படமாட்டாது என்றும் பல்கலைக்கழக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.