You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

TNAU Admission 2022 latest news | வேளாண்மை பல்கலைக்கழகம் மாணவர் சேர்க்கை விவரம்

Typing exam apply Tamil 2023

TNAU Admission 2022 latest news | வேளாண்மை பல்கலைக்கழகம் மாணவர் சேர்க்கை விவரம்

TNAU Admission 2022 latest news

வேளாண்மை படிப்பிற்கு விண்ணப்பித்த மாணவர்கள் மத்தியில் எப்போது வேளாண்மை பல்கலைக்கழகம் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும், எப்போது மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக முந்தைய காலங்களில் வேளாண்மை பல்கலைக்கழகம் இந்த தேதியில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவித்துவிட்டு, பல்வேறு காரணங்களை கூறி வெளியிடவில்லை. இதனால் மாணவர்கள் பெற்றோர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி மருத்துவ கலந்தாய்விற்கு பின்னரே வேளாண்மை படிப்புகளுக்கான கலந்தாய்வு நடத்தப்படும் என்று நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டு வரையறைகளை அரசு வழங்க வேண்டும். அதை வழங்கிய பின்னரே, தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.

Read Also: TNAU PG ADMISSION 2022

இதுதவிர, மருத்துவ கலந்தாய்விற்கு முன்னர் தரவரிசை பட்டிய்ல வெளியிடபட்டு, கலந்தாய்வு நடத்தினால் சில மாணவர்கள் மருத்துவ இடம் கிடைத்துவிடும் அங்கு சென்று விடுவார்கள். அந்த இடங்களை நிரப்ப மீண்டும் கலந்தாய்வு நடத்த வேண்டியிருக்கும்.

இதை கருத்தில்கொண்டு மருத்துவ கலந்தாய்வு முடிந்தபின், வேளாண்மை கலந்தாய்வு நடத்த திட்டமிட்டுள்ளோம். கலந்தாய்வு துவங்கிய மூன்று வாரத்திற்குள் மாணவர் சேர்க்கை முடிக்கும் அளவுக்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்ககைக்கழகத்தில் 12 இளங்கலை பாட பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இதில் பல்கலை உறுப்பு கல்லூரிகளில் 2,148 இடங்கள், இணைப்பு கல்லூரிகளில் 2,337 இடங்கள் என் மொத்தம் 4,885 இடங்கள் உள்ளன.