வேளாண் பல்கலைக்கழக கலந்தாய்வு நிறுத்திவைப்பு TNAU UG counselling Postponed
வேளாண்மை பல்கலைக்கழக இளங்கலை பட்டப்படிப்பிற்கான கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் திங்கள் கிழமை தெரிவித்துள்ளது.
READ ALSO : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் தரவரிசை பட்டியல் வெளியீடு
வேளாண் பல்கலைக்கழக கலந்தாய்வு
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக இளமறிவியல் பட்ட படிப்புகளுக்கான கலந்தாய்வு வருகிற பிப்ரவரி 11ஆம் நாள் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. நிர்வாக காரணங்களால் 2021-2022ஆம் ஆண்டிற்கான இளமறிவியல் பட்டப்படிப்பு கலந்தாய்வு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் கலந்தாய்வு தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று முனைவர் கல்யாணசுந்தரம் முதன்மையர் வேளாண்மை மற்றும் தலைவர், மாணவர் சேர்க்கை தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 0422-6611210.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
PRESS NOTE HERE