TN Temporary Teachers Job in Coimbatore | தற்காலிக ஆசிரியர் பணியிடம் விண்ணப்பம் வரவேற்பு
TN Temporary Teachers Job in Coimbatore
கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கோவை மாவட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் உயர்நிலை, நடுநிலை, தொடக்க பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்களின் நலன் கருதி பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் காலிபணியிடங்கள் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளன.
முட்டத்துவயல் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட தொடக்க பள்ளியில் 1 இடைநிலை ஆசிரியர் காலி பணியிடமும், முட்டத்துவயல் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலை பள்ளியில் பட்டதாரி ஆசிரியர் ஆங்கிலம் 1, கணிதம் 1, அறிவியல் 1 என 3 காலிபணியிடங்களும், மாவுத்தம்பதி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலை பள்ளியில் தமிழ் பட்டதாரி ஆசிரியர் 1 காலிபணியிடமும், வால்பாறை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலை பள்ளியில் பட்டதாரி ஆசிரியர் கணிதத்துக்கு 1 காலிபணியிடமும் உள்ளன.
Read Also: ஆசிரியர் பணி நியமனம் எந்த தேர்வு என அரசு குழப்பம்
அதேபோன்று, வஞ்சியபுரம் அரசு ஆதிதிராவிடர் நல தொடக் பள்ளியில் இடைநிலை ஆசிரியர் 1 காலிபணியிடமும், பெரிய கல்லாறு அரசு ஆதிதிராவிடர் நலத் தொடக்க பள்ளியில் இடைநிலை ஆசிரியர் 1 காலி பணியிடமும், சின்கோனா அரசு ஆதிதிராவிடர் நலத் தொடக்க பள்ளியில் இடைநிலை ஆசிரியர் 1 காலிபணியிடமும், சின்கோனா அரசு ஆதிதிராவிடர் நலத்தொடக்க பள்ளியில் இடைநிலை ஆசிரியர் 1 காலிப்பணியிடமும் உள்ளன.
இடைநிலை ஆசிரியருக்கு ரூ 12 ஆயிரமும், பட்டதாரி ஆசிரியருக்கு ரூ 15 ஆயிரமும் மாதத் தொகுப்பூதியமாக வழங்கப்பட உள்ளது. ஆதிதிராவிடர், பழங்குடியினர், பள்ளி அமைந்துள்ள பகுதி, அதன் அருகில் உள்ளவர்கள், பள்ளி அமைந்துள்ள எல்லைக்குள் வசிப்பவர்கள், பள்ளி அமைவிட ஒன்றிய எல்லைக்குள் வசிப்பவர்கள், மாவட்ட எல்லைக்குள் வசிப்பவர்களுக்கு மாவட்ட எல்லைக்குள் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தன்னார்வலர்களாக பணிபுரிந்து வருபவர்கள், கல்விதகுதிகளுடன் ஆசிரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்றவர்கள், இடைநிலை ஆசிரியருக்கு டி.டெட் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரா்கள் எழுத்து மூலமான விண்ணப்பங்களை நேரடியாகவோ, அஞ்சல் மூலமாகவோ உரிய கல்வித்தகுதி சான்றிதழ்களுடன் மாவட்ட ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல அலுவலகத்தில் செப்டம்பர் 4ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றாா்.