You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

TET Competitive Exam Last News in Tamil |  ஆசிரியர் பணி நியமனம் எந்த தேர்வு என அரசு குழப்பம்

Kanavu Aasiriyar award list 2023

TET Competitive Exam Last News in Tamil |  ஆசிரியர் பணி நியமனம் எந்த தேர்வு என அரசு குழப்பம்

TET Competitive Exam Last News in Tamil

அரசு பள்ளிகளில் 14,000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் உரிய கொள்கை முடிவு எடுக்காததால் பணி நியமனம் தாமதமாகிறது.

தமிழக அரசு பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் இடைநிலை ஆசிரியர் பதவியில் சுமார் 4,989 மற்றும் 10ஆம் வகுப்பு  வரை பாடம் நடத்தும் பட்டதாரி ஆசிரியா் பதவியில் 5,154 மற்றும் பிளஸ் 2 வரை பாடம் நடத்தும் 3,876 முதுநிலை ஆசிரியர் என 14,019 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்த காலியிடங்களில் ஒரு பகுதியை மட்டும், ஆசிரியர் தோ்வு வாரியம் சார்பில் ஆண்டு தேர்வு திட்ட அறிக்கை கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. இதன்படி 10000 இடங்களை நிரப்ப, இந்த ஆண்டு மே,  ஜூன் மற்றும் நவம்பர் உள்ளிட்ட மாதங்களில் தேர்வு நடத்த உத்தேசிக்கப்பட்டது. ஆனால், தேர்வுகளை நடத்துவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. பள்ளி கல்வி முதன்மை செயலாளர் காகர்லா உஷா, ஆசிரியர் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மற்றும் அதிகாரிகள் குழுவினர் இந்த விவகாரத்தில் முடிவு எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Read Also: ஆசிரியர் தகுதி தேர்வு இலவச பயிற்சி

இதுகுறித்து பள்ளி கல்வி வட்டாரங்கள் கிடைத்த தகவல், தமிழக அரசின் ஆசிரியர் தகுதித்தேர்வு முடித்தவர்கள் சுமார் 80000 பேர் அரசு பணிக்காக காத்திருக்கின்றனர். கடந்த 2013ல் தகுதி தேர்வு முடித்தவர்களில் 16000 பேர் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து வேலை கிடைக்காத நிலையில் உள்ளனர். இந்தநிலையில் ஆசிரியர் பணிக்கு தகுதி தேர்வு மட்டுமின்றி, இன்னொரு போட்டி தேர்வு எழுத தமிழக அரசு ஏற்கனவே ஆணை பிறப்பித்துள்ளது. இந்த தேர்வை எழுத பெரும்பாலனோர் ஆர்வம் காட்டவில்லை. இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பட்டதாரிகள் தரப்பில் பல கட்ட போராட்டங்கள் நடந்துள்ளன.

அடுத்த ஆண்டு, துவக்கத்தில் லோக்சபா தேர்தல் வர உள்ள நிலையில், பட்டதாரிகள் அதிருப்தியால் தேர்தலில், ஆளும்கட்சிக்கு பாதிப்பு ஏற்படவிடக்கூடாது என கருதப்படுகிறது. அதனால், போட்டி தேர்வு நடத்த முடியாமல், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை பணி நியமனம் செய்ய முடியாமல் குழப்பம் நீடிக்கிறது. இதனால் பணி நியமனம் காலதாமதமாகிறது.