TN Teacher Counselling News 2023 | மாறுதல் கலந்தாய்வு நடத்தக்கோரி மனு
TN Teacher Counselling News 2023
தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாாி ஆசிரியா் கழக மாநில செய்தி தொடர்பாளர் முருகேசன், பள்ளி கல்வித்துறை ஆணையருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியா்களாகவும், தமிழாசிரியர்களாகவும் பணியாற்றுபவர்களை பணி மூப்பின் அடிப்படையில் கலந்தாய்வு மூலம், அரசு உயர் நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வின் மூலம் நியமிக்க வேண்டும்.
Read Also: எண்ணும் எழுத்தும் பயிற்சி டயட் விரிவுரையாளர்கள் நாட்டாமை
தமிழ்நாடு முழுவதும் அரசு நிதி உதவிபெறும் அனைத்து பள்ளிகளிலும் 2023 மார்ச்சிற்கான சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது. அதனை விரைந்து வழங்க வேண்டு்ம். மே மாத இறுதிக்குள் அனைத்து வகை ஆசிரியர்களுக்கு ஒளிவுமறைவு அற்ற இடமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும், காலிபணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்,
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.