Ennum Ezhuthum Training | எண்ணும் எழுத்தும் பயிற்சி டயட் விரிவுரையாளர்கள் நாட்டாமை
Ennum Ezhuthum Training
தமிழ்நாடு அரசு, ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் துறையின் கீழ் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (டயட்) செயல்பட்டு வருகிறது, அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வந்த இப்பயிற்சி நிறுவனமானது ஆசிரியர் பயிற்சிக்கான மாணவர்களின் சேர்க்கை இன்றி தற்போது குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டுமே இயங்கி வருகின்றது.
ஆசிரியர்களுக்கு அவ்வப்போது பணியிடை பயிற்சி கொடுத்து வருகிறது. தமிழக அரசு கொண்டுவந்துள்ள எண்ணும் எழுத்தும் கல்வி திட்டத்தின், ஆசிரியர்களுக்கான பயிற்சியினை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் விரிவுரையாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களை கொண்டு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
எண்ணும் எழுத்தும் பயிற்சி மாநில அளவில், மாவட்ட அளவில் மற்றும் ஒன்றிய அளவில் நடைபெற்று வருகிறது. ஒன்றிய அளவில் நடைபெறும் பயிற்சிகளை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் விரிவுரையாளர்களின் மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனத்தில் பணி புரியும் பெரும்பாலான விரிவுரையாளர்கள் 10 ஆண்டுகளுக்கு மேல் ஒரே பயிற்சி நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதால் வீட்டின் அருகாமையில் இருந்து கொண்டு, அருகாமை ஒன்றியங்களை தேர்வு செய்து கொண்டு பயிற்சி வழங்கும் இடத்தில் மேற்பார்வை செய்வதாக தெரிவித்துவிட்டு, வீட்டிலேயே இருந்து கொள்கின்றனர். பயிற்சி நடைபெறும் இடத்திற்கு உயர் அதிகாரிகள் பார்வையிட்டால் வீட்டிலிருந்து உடனே வந்து விடுகின்றனர்.
Read Also: Ennum Ezhuthum KIT CATALOGUE PDF
தமிழக முதல்வர் அவர்களால் எண்ணும் எழுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வி நிறுவன விரிவுரையாளர்கள் சிலரால் இத்திட்டம் செயலற்று போகிறது. குறிப்பிட்ட ஒன்றியங்களை பல ஆண்டுகளாக குத்தகைக்கு எடுத்துக் கொண்டு பிற ஒன்றியங்களை பார்வையிடாமல் நடைபெறும் பயிற்சியினை மேற்பார்வை செய்யாமல் ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வி நிறுவன விரிவுரையாளர்கள் செயல்படுவதை கேட்பதற்கு நாதியற்ற போகிறது. கேள்வி கேட்க ஆள் இல்லை. உடனடியாக எஸ்சிஇஆர்டி அதிகாரிகள் முறையாக இவர்களை கண்காணிக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த ஆசிரியர்களின் கோரிக்கையாக உள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரு குறிப்பிட்ட இடத்தில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு பணியிட மாறுதல் செய்யும் நடைமுறை உள்ள நிலையில் ஆசிரியர் பயிற்சி மற்றும் கல்வி நிறுவனத்தில் 20 ஆண்டுகள் பணிபுரிந்தாலும் பணி மாறுதல் இல்லை என்பது பணியில் மெத்தனத்தையும் பணியில் தொய்வையும் ஏற்படுத்தும் என்பதை அதிகாரிகள் கண்டு கொள்ளாதது வருத்தம் அளிப்பதாக தெரிவிக்கின்றனர்.
ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஒன்றியத்தின் அளவிற்கேற்ப விரிவுரையாளர்கள் இல்லை. சில மாவட்டங்களிலும் அதிகபட்சமாகவும், சில மாவட்டங்களில் குறைவாகவும் பணிபுரிந்து வருகின்றனர். விரிவுரையாளர்கள் நிரவல் செய்யப்பட வேண்டும். மாவட்டங்கள் தோறும் கற்றலில் பின்தங்கியுள்ள ஒன்றியங்கள் கல்வித்துறையால் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டிய மலைபாங்கான ஒன்றியங்கள் மற்றும் தொலைத்தூர ஒன்றியங்களில் இவர்கள் அங்கு செல்வதில்லை என்று குற்றச்சாட்டு உள்ளது.
கல்வி அமைச்சர் இதில் கவனம் செலுத்தி தமிழக அரசு கொண்டுவந்துள்ள திட்டம் சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுப்பார்களா, ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து கடமைக்கு பணியாற்றி கொண்டு, சீட்டை தேய்த்துகொண்டு பணி மாறுதல் வழங்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த ஆசிரியர்களின் கோரிக்கையாக உள்ளது.
இதுதொடர்பாக எஸ்சிஆர்டிஇ உயர் அதிகாரி லதா ஐஏஎஸ் நடவடிக்கை எடுப்பாரா என்பது பொருத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.