அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
27.1 C
Tamil Nadu
Thursday, June 8, 2023

TN Teacher Bio metric News | ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் அமல்படுத்த கோரிக்கை

TN Teacher Bio metric News | ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் அமல்படுத்த கோரிக்கை

TN Teacher Bio metric News

கொரோனா பாதிப்பு இல்லாத நிலையில், அரசு பள்ளிகளில் மீண்டும் பயோமெட்ரிக் வருகை பதிவு முறையை கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

கோவை மாவட்டத்தில் சில அரசு பள்ளிகளில் உரிய நேரத்திற்கு வந்து பணிகளை துவங்காமல் , தலைமை ஆசிரியர்களை கைக்குள் போட்டுக்கொண்டு டிமிக்கி கொடுக்குமு் சில ஆசிரியர்கள் உள்ளனர். இவர்களை வழிக்கு கொண்டு வர மீண்டும் பயோமெட்ரிக் வருகைப்பதிவை கொண்டு வர வேண்டும் என, கல்வியாளர்கள் விரும்புகின்றனர்.

Read Also: அங்கன்வாடி தற்காலிக ஆசிரியர் பணி

தமிழகம் முழுக்க, அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், கல்வித்துறை அலுவலகங்கள், கடந்த 2019ல் இருந்து, பயோமெட்ரிக் முறையில், வருகைப்பதிவு உறுதி செய்யப்பட்டது. இதோடு வருகை பதிவேட்டிலும் ஆசிரியர்கள் கையொப்பமிட்டு வந்தனர்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக 2020 ஏப்ரல் மாதத்தில் இருந்து பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையை பின்பற்றப்பட்டது. தற்போது ஆசிரியர்களின் வருகை பதிவு செய்ய அதற்காக பிரத்யேக செயல உருவாக்கப்பட்டு, பள்ளி தலைமை ஆசிரியர் மேற்பார்வையில் பதிவேற்றப்படுகிறது. இதை அடிப்படையாக, கொண்டே ஊதியம் வழங்கப்படுகிறது. இச்செயலியை பயோமெட்ரிக் உடன் இணைத்தால் மட்டும், பள்ளி செயல்பாடுகள் முறையாக நடக்கும் என்ற கருத்து எழுந்துள்ளது.

ஏனெனில், ஆலாந்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கு வராத நாட்களிலும், ஆசிரியர் ஒருவர் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்ட சம்பவம் சமீபத்தில் நடந்திருக்கிறது. இதேபோல், புகார் வெளிவராமல், இன்னும் எத்தனை பள்ளிகளில் ஆசிரியர்கள் டிமிக்கி கொடுக்கிறார்களோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

கல்வியாளர்கள் கூறுகையில், தொற்று படிப்படியாக குறைந்துவிட்டதால் பயோமெட்ரிக் மீண்டும் அமல்படுத்துவதில் சிக்கல் இல்லை. உரிய நேரத்திற்கு முன்பே, பள்ளிக்கு செல்ல வேண்டுமென்ற துடிப்புடன் இருக்கும் ஆசிரியர்கள் பலர் உள்ளனர். சரியாக வகுப்புக்கு செல்லாமல் தலைைம ஆசிரியருக்கு ஜால்ரா அடித்தபடி நாட்களை நகர்த்தும் சில ஆசிரியர்கள், சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு இஷ்டம்போல் வருகின்றனர்.

இவர்கள் விடுமுறை எடுத்தாலும், வருகை புரிந்ததாக குறிப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். வாங்கும் சம்பளத்துக்கு வேலை செய்யாமல் மாணவ, மாணவிகளுக்கு துரோகம் செய்யும் இவர்களை போன்றவர்களை ஒழுங்கப்படுத்த பயோ மெட்ரிக் முறையிலான வருகைப்பதிவு மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்றனர்.

முதன்மை கல்வி அலுவலர் பூபதியிடம் கேட்டபோது, தொற்று பரவல் இன்னும் இருப்பதால், பழைய நடைமுறை பின்பற்றப்படுகிறது. இயக்குனரகத்தில் இருந்து உத்தரவு வந்தால் பயோமெட்ரிக் முறை உடனே நடைமுறைப்படுத்தப்படும், என்றார்.

Source Dinamalar

Related Articles

Latest Posts