அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
25.4 C
Tamil Nadu
Thursday, October 5, 2023

TN Anganwadi Temporary Teacher Job 2022 | அங்கன்வாடி தற்காலிக ஆசிரியர் பணி

TN Anganwadi Temporary Teacher Job 2022 | அங்கன்வாடி தற்காலிக ஆசிரியர் பணி

TN Anganwadi Temporary Teacher Job 2022

பள்ளி கல்வித்துறை தொடக்க கல்வியில் உள்ள ஊராட்சியில் ஒன்றிய/நகராட்சி அரசு தொடக்க, நடுநிலை பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில் செயல்பட்டு வரும் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் செயல்பட அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து கல்வித்துறை சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, அரசு/ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு நடப்பாண்டில் கற்றல்-கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள ஒரு மையத்திற்கு ஒரு ஆசிபியர் என்ற அடிப்படையில் 2,381 சிறப்பு ஆசிரியர் தேவைப்படுகின்றனர் எனவும், அந்த பள்ளிகளுக்கு தேவையான சிறப்பு ஆசிரியர்கள் தேவையை முன்னுரிமையாக கொண்டு தற்காலிக சிறப்பாசிரியர்களை நியமிக்கவும், அவர்களை தெரிவு செய்யப்படும் முறை மற்றும் அவர்களுக்கான பணிகளை ெதாடக்க கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ளார்.

Read Also: பெண் குழந்தை விருது அக்டோபர் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

தற்காலிக ஆசிரியர் தேர்வு செய்யும் முறை

  • இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணிபுரியும் தகுதி வாய்ந்த தன்னார்வலர்களை மழலையர் வகுப்புகள் இயங்கும் பள்ளியின் மேலாண்மை குழுவே தேர்ந்தெடுத்து தற்காலிக ஆசிரியராக நியமிக்கலாம். இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தகுதி வாய்ந்த நபர் இல்லாதபோது தொடக்க கல்வி பட்டயப்படிப்பு தேர்ச்சி பெற்ற பிற நபர்களை நியமனம் செய்யலாம்.
  • இந்த பணி முழுவதும் தற்காலிக அடிப்படையிலானது.
  • சிறப்பாசிாியர்கள் எல்கேஜி மற்றும் யுகேஜி இரு வகுப்புகளை ஒரு சேர கையாள வேண்டும்.
  • இந்த சிறப்பாசிரியர்களுக்கு பிழைப்பூதியம் ரூ.5000 பள்ளி மேலாண்மை குழு மூலம் மாதம் தோறும் வழங்கிடலாம்.
  • இந்த சிறப்பாசிரியர்களுக்கு ஒரு கல்வி ஆண்டிற்கு ஜூன் முதல் ஏப்ரல் 11 மாதங்கள் மட்டுமே பணிக்காலம் ஆகும்.
  • இந்த சிறப்பாசிரியர்கள் பள்ளியின் கடைசி வேலை நாளன்று விடுவிக்கப்படுவர்.

சிறப்பு ஆசிரியர்களுக்கான பயிற்சி

  • தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்ட சிறப்பாசிரியர்களுக்கு எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளை கையாள்வதற்கு தேவையான சிறப்பு பயிற்சிகளை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வியுடன் இணைந்து வழங்கிடலாம்.
  • பயிற்சி நிறைவுக்குப்பின் இந்த ஆசிரியர்கள் மழலையர் பள்ளிகளில் காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை பணியாற்ற அனுமதிக்கலாம்.
  • இதற்காக பள்ளி கல்வித்துறை ரூ 13.10 கோடி ஒருங்கிணைந்த கல்வி திட்டத்திற்கு வழங்கப்பட உள்ளது.

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்

இந்த பணிக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க முடியாது. எனவே, தகுதியானவர்கள் அருகில் உள்ள அரசு பள்ளி வளாகத்தில் உள்ள செயல்படும் அங்கன்வாடிகளை அறிந்து, அதன் தலைமை ஆசிரியர்களை அணுகலாம்.

Related Articles

Latest Posts