Read Also: பள்ளிக்கூடம் திட்டம் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
மாநில அரசின் இந்த விருது பெறுவதற்கு தகுதியான பெண் குழந்தைகள் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த விருதுக்காக விண்ணப்பிப்பவர்கள் பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தைகளை திருமணங்களை தடுத்தல் மற்றும் தவிர்த்தல் அல்லது வேறு ஏதாவது வகையில் சிறப்பான, தனித்துவமான சாதனை பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூடநம்பிக்கைகள் ஆகியவற்றிற்கு தீர்வு காணும் விதமாக ஒவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாகவோ விழிப்புணர்வு ஏற்படுத்தியிருத்தல், ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை போன்று செயல்களை சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல் போன்ற வீரதீர செயல்புரிந்தவர்களாக இருக்க வேண்டும். இவ்விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் மாவட்ட சமூக நல அலுவலகம் அலுவலர்களை சந்திந்து கூடுதல் விவரங்களை கேட்டு பெறலாம். மேலும் விண்ணப்பிக்க விரும் பெண் குழந்தைகள் வரும் அக்டோபர் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Source Tamil Murasu Evening Daily