பள்ளிக்கூடம் திட்டம் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
கோவை மாவட்டத்தில்பள்ளிக்குழந்தைகள் பாதுகாப்புக்காக பள்ளிக்கூடம் திட்டத்தை அமல்படுத்துவதில், கோவை மாவட்ட காவல்துறை தீவிரமாக களம் இறங்கியுள்ளது.
பள்ளிக்கூடம் திட்டம் என்றால் என்ன?
கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் கூறியதாவது: பள்ளிக்குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க அவர்களை தயார்படுத்துவது தான் ‘புராஜக்ட் பள்ளிக்கூடம்’ திட்டம். இந்த திட்டத்தில் ஒவ்வொரு உட்கோட்டத்திலும் பள்ளி தலைமையாசிரியர், முதல்வர், ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்களை கொண்டு கூட்டம் நடத்தப்படும். அவர்களுக்கு பயிற்சி பெற்ற பெண் காவலர்கள், குழந்தை நல அலுவலர்கள் பயிற்சி அளிப்பர்.குழந்தைகளுக்கான பிரச்னைகள் என்ன, பாலியல் தொல்லை நடப்பது தெரிந்தால் எப்படி காவல்துறையினரிடம் அணுகி தீர்வு காண்பது என்று ஆசிரியர்களுக்கு விளக்கம் அளிக்கப்படும்.
READ ALSO THIS: குழந்தைகள் வளரிளம் பருவம் நாம் எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும்?
அடுத்த கட்டமாக, மாவட்டத்தில் செயல்படும் 997 பள்ளிகளிலும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்படும்.முதலில், 10 வயதுக்கு கீழே இருக்கும் குழந்தைகளுக்கு அடிப்படையான விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்படும். குட் டச், பேட் டச் குறித்து புரிதல் ஏற்படுத்தப்படும். 10 வயதுக்கு மேல் இருக்கும் குழந்தைகளுக்கு, இணையத்தின் நன்மை, தீமைகள் விளக்கம் அளிக்கப்படும். கடந்த 2 ஆண்டுகளாக குழந்தைகளுக்கு எதிரான வழக்குகள் அடிப்படையில், ஹாட் ஸ்பாட் கிராமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அப்பகுதி பள்ளிகளுக்கு முன்னுரிமை அளித்து விழிப்புணர்வு பயிற்சி தரப்படும். இவ்வாறு, கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் குறிப்பிட்டார்.
இதையடுத்து, பள்ளி குழந்தைகளை காக்கும் பள்ளிக்கூடம் திட்டத்தை கோவை மாவட்டத்தில் அமல்படுத்துவதில் காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் முனைப்புடன் ஈடுபட்டுள்ளார்.
அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் உட்கோட்ட காவல்துறையின் சார்பில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாலமுருகன் உத்தரவின் பேரில் மேட்டுப்பாளையம் எல்லைக்குட்பட்ட அனைத்து காவல் நிலைய பகுதியில் இருக்கும் பள்ளிகளுக்கு காவல்துறையினர் நேரில் சென்று மாணவர் மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி அறிவுரை வழங்கி வருகிறார்கள்.
அதன் ஒரு பகுதியாக இன்று மேட்டுப்பாளையம் காவல்துறையின் சார்பில் மேட்டுப்பாளையம் காவல்துறை ஆய்வாளர் சண்முகம் மேற்பார்வையில் சங்கர் நகர் பகுதியில் உள்ள பகவான் மகாவீர் மேல்நிலைப் பள்ளியில் இன்று பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் சிறப்பு உதவி ஆய்வாளர் கிருஷ்ணராஜ் தலைமை காவலர் சுமித்ரா அவர்களும் மாணவ மாணவிகள் இடையே பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் விடியல் காவலன், SOS ஷாக் செயலி பற்றிய விளக்கத்தையும் சைபர் கிரைம் குற்றத்தை பற்றியும், மாணவ மாணவிகள் ஆசிரியர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் தங்களின் ஆசிரியர்களுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும், காரணம் ஆசிரியர்கள் தான் நம் நாட்டின் பல அறிஞர்களையும் பல ஆராய்ச்சியாளர்களையும் தொழிலதிபர்களையும் உருவாக்கும் ஆசான்கள் ஆகவே அவர்களுடன் மிகவும் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் பெற்றோர்களுக்கு இணையாக ஆசிரியர்களுக்கு உரிய மதிப்பளித்து அவர்களின் பேச்சைக் கேட்டு நல்ல முறையில் கல்வி பயின்று உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்றும் மாணவர்களுக்கு புரியும் வண்ணம் விளக்கமாக அறிவுரை வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட 410 மாணவ மாணவிகள் கலந்துகொண்டு காவல் துறையினரின் அறிவுரையை கேட்டறிந்தனர் கோவை மாவட்டகாவல்துறையினரின் இந்த முயற்சிக்கு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பெற்றோர்களும் பாராட்டு தெரிவிப்பதோடு பெரும் வரவேற்பும் அளித்து வருகிறார்கள்.
Join WhatsApp Group | WhatsApp Group |
To Follow Telegram : | Telegram Link |
To Follow Facebook | Facebook Link |
To Follow Twitter | Twitter Link |
To Follow Instagram | Instagram Link |
To Follow Youtube | Youtube Link |