அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
23 C
Tamil Nadu
Sunday, December 10, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

Adolescent Problem in Tamil – குழந்தைகள் வளரிளம் பருவம் நாம் எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும்?

Adolescent Problem in Tamil – குழந்தைகள் வளரிளம் பருவம் நாம் எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும்?

Adolescent Problem in Tamil – வளரிளம் பருவம் என்றால் என்ன?

ஒரு மனிதனின் வாழ்வில் வெவ்வேறு காலகட்டங்களில், வளரிளம் பருவம் என்பது மிக அற்புதமான பருவம். கூடவே இது சவால்கள் நிறைந்த காலகட்டமும் கூட. குழந்தையிலிருந்து முற்றிலும் வளர்ந்தவர்களாக மாறும் இடைப்பட்ட காலம் வளரிளம் பருவம். இந்த பருவத்தில் வளர்ச்சி மிக துரிதமாக நடக்கிறது. இதற்கு இளையோர் ஈடு கொடுக்க வேண்டியிருக்கிறது. உடல் மாறுகிறது., வாழ்க்கை மதிப்பீடுகள் மாறுகிறது. உணர்வுகளில் எண்ணங்களில் மாற்றம் வருகிறது.

Adolescent Problem in Tamilஉடல்ரீதியான வளர்ச்சி:

ஏறத்தாழ வாழ்க்கையின் இரண்டாவது பத்தாண்டு சமயத்தில். மூளை ஹார்மோன்களை தூண்டுகிறது. ஹார்மோன்களின் தூண்டுதலால் கை, கால்,வளர்ச்சி, குரலில் மாற்றம், உயரமாதல், இனப்பெருக்க உறுப்புகளில் மாற்றம் போன்றவை நிகழ்கின்றன. உடலின் பல்வேறு விதமான வளர்ச்சிகள் வளரிளம் பருவத்தினரை குழப்புகின்றன. பெரிதாகிக் கொண்டே வரும், கை, கால்கள், மாறிக்கொண்டு வரும் குரல், மார்பகங்கள்- இதற்கேற்ற வகையில் மாற்றப்பட வேண்டிய உடை, தன் வயது ஒத்தவர்களின் வளர்ச்சியோடு ஒப்பிட்டு மீசை பெரிதாக வளரவில்லை, மார்பகங்கள் பெரிதாக வளரவில்லை என்று கவலைப்படுகிறார்கள். இதையெல்லாம் பெரியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

திரும்ப, திரும்ப நாங்களும் இதைக் கடந்துதானே வந்தோம் என்று மட்டுமே சொல்லி விடாதீர்கள், உங்கள் காலத்தில் இருந்ததை விட இப்பொழுது மீடியாக்கள், சமூக ஊடகங்கள் ஆதிக்கம் பெருகிவிட்டது. சினிமாக்களில், தொலைக்காட்சிகளில், விளம்பரங்களைப் பார்த்து இளைஞர்கள் கவரப்படுகிறார்கள். நடிகர், நடிகையரை பார்த்து அவர்களைப் போல உடை அணிய, பழக, நண்பர்களுடன் சுற்ற விரும்புகிறார்கள். நீண்ட நேரம் கண்ணாடி முன் நிற்கிறார்கள். ஹார்மோன்கள் காரணமான உடல் வளர்ச்சியை புரிந்து கொண்டது போல், சமூக, மன உணர்வு, அறிவார்ந்த வளர்ச்சியில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

Adolescent Problem in Tamil – உணர்வுரீதியான வளர்ச்சி

Also Read This | AIM Of The Safety and Security at School – மாணவர் பாதுகாப்பு ஆலோசனை குழு நோக்கம்

ஹார்மோன்களின் தூண்டுதல் காரணமாக வளரிளம் பருவத்தின் ‘மூடு’ மாறிக்கொண்டே கொண்டே இருக்கிறது. அதீத சந்தோஷமாகவும் இருப்பார்கள், காரணமே இல்லாமல் சோகமாகவும் இருப்பார்கள். அவர்கள் உணர்வுகளைக் கையாளத் தெரியாமல் உணர்வுகளை அப்படியே வெளிப்படுத்துவதால் வரக்கூடிய பின் விளைவுகள் பற்றி யோசிக்க தெரியாமல் வார்த்தைகளைக் கொட்டிவிடுவார்கள். இதனால் உறவுகளில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்வார்கள். உடல்ரீதியான வளர்ச்சி கூட சிலவிதமான மன உணர்வுகளை கிளம்பிவிடும்.

Adolescent Problem in Tamil
Adolescent Problem in Tamil

உணர்வு ரீதியான மாற்றங்கள்.

  • குழந்தையாக இருக்கும்பொழுது, பெற்றோர் மேல் இருந்த அதீத பாசம் குறையத் தொடங்குகிறது அவ்வப்பொழுது பெற்றோர்களிடம் வெகுண்டு, கடிந்து பேசுகிறார்கள்.
  • தங்கள் சுதந்திரத்தில் பெற்றோர்கள் தலையிடுவதாக நினைக்கிறார்கள்.
  • உடலின் வளர்ச்சி மாற்றங்கள் பெருமிதம், சந்தோஷம், கவலை, சங்கடம், மற்றவர்களுடன் ஒப்பீடு என பல்வேறு விதமான கலவையான உணர்வுகளை உருவாக்குகிறது. நான் யார் என்ற கேள்வியும் அது பற்றிய உணர்வும் வருகிறது.
  • நண்பர்கள், நட்பு என்பது வாழ்க்கையில் முக்கியமாகிறது.
  • உடை, நடை, பாவனை, உணவு, பழக்கவழக்கங்கள் போன்ற செயல்களில் நண்பர்களின் தாக்கம் அதிகமாகிறது.
  • ‘தான்’ என்பது பற்றிய எண்ணத்தில் திட்டவட்டமாக எண்ணுவது அதிகரிக்கிறது. தனித்துவமாக இயங்கும் எண்ணம் மேலும் வலுப்படுகிறது. நாம் (ஆசிரியர்கள்) அதைப் புரிந்துகொண்டு அவர்களை ஊக்கப்படுத்தவேண்டும்.

அறிவு வளர்ச்சி:

குடும்பத்தில் மற்றும் பள்ளியில் இருக்கக்கூடிய சட்ட திட்டங்களை சவாலாக பார்க்கிறார்கள். ஓயாமல் விவாதிக்க விரும்புகிறார்கள். அதற்கு உதாரணம் தன்னால் யோசிக்க முடிகிறது என்பதனை ஒரு திரில்லாகப் பார்க்கின்றனர். அதை வெளிப்படுத்தவும் ஆசைப்படுகிறார்கள். ஆனால், இப்படி அவர்கள் எதற்கெடுத்தாலும் விவாதிப்பது பெரியவர்களுக்கு ஏற்புடையதாக இல்லை.

ஏற்கனவே ஒருபுறம் சட்டதிட்டங்களை கேள்வி கேட்டாலும், மறுபுறம் அறரீதியாக இது சரி, இது தப்பு என்ற பார்வை இருப்பதால், அதன் அடிப்படையில் தங்களைச் சுற்றி உள்ள உலகையும், மனிதர்களையும் பார்க்கிறார்கள். எந்தச் செயல்களிலும் பின் விளைவுகள் பற்றி பெரிதும் புரிந்து கொள்ளாமல், உடனடி தீர்வு தொடர்பாக அனைத்தையும் அணுகுகிறார்கள்.

சமூகத்தின் மதிப்பீடுகள், அதிகாரம் போன்றவற்றை கேள்வி கேட்பார்கள். தன் வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயங்களில் தன் கருத்துகளை சரி என்று விவாதிப்பார்கள். (எ-டு தான் தேர்ந்தெடுத்த நண்பர்கள் பற்றி, தன் நடை உடை பற்றி, தான் யாருடன் சேர்ந்திருப்பேன் என்பது பற்றி

சமூக வளர்ச்சி

இந்த காலகட்டத்தில் பெற்றோருடன் இருப்பதைவிட, நண்பர்களோடு நேரம் செலவழிக்கவே தோன்றும். தன் வயதொத்தவர்களும், ஒரு சில வருடங்கள் மூத்தவர்கள் தான் அவர்களுடைய முன்மாதிரிகளாகப் படுவார்கள். அவர்களைப் பார்த்து உடை உடுத்துவது, முடிக்கு கலர் அடிப்பது, கொச்சையான மொழியில் பேசுவது, மிக தைரியமானவர்களாகக் காட்டிக்கொள்வது என்று செயல்படுவார்கள். தன் வயதொத்தவர்களின் குழுவில் அங்கீகரிக்கப்படவேண்டும் என்பதற்காகவே பல விஷயங்களை முன்பின் யோசனையின்றி செய்வார்கள்.

சில சமயங்களில் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது போன்ற செயல்பாடுகளில் கூட ஈடுபட நினைப்பார்கள். இந்த வயதில் இப்படி இருப்பதுதான் கெத்து காட்டுவது என்று நினைப்பார்கள். வளரிளம் பருவத்தினரை சுற்றியுள்ள அனைத்து பெரியவர்களும் -ஆசிரியர் பெற்றோர், சமூகம் இந்த வளர்ச்சி நிலைகளைப் புரிந்துகொள்வது மிக அவசியம். கூடவே மூளையின் வளர்ச்சி பற்றியும் புரிந்துகொள்ள வேண்டும்.

“என்ன வயசுப் பசங்க மூளையே இல்லாத மாதிரி நடந்துகிறாங்க” – நாம் அடிக்கடி கேள்விப்படும் வாக்கியம் இது

வளரிளம் பருவத்தில் அறிவு சார்ந்த மூளையின் பகுதியை விட, உணர்வு சார்ந்த மூளையின் பகுதிதான் அவர்களை அதிகமாக வழிநடத்துகிறது. தர்க்கரீதியாக அணுகுவதை விட இந்த வயதில் உணர்வுரீதியாகத்தான் அனைத்தையும் அணுகுகிறார்கள். இதனால் சிக்கலான தருணங்களில் வளரினம் பருவத்தினர் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்றால்,

  • அவர்கள் உணர்வது ஒன்றாகவும், யோசிப்பது வேறாகவும் இருக்கும்.
  • பிறர் உணர்வுகளை, உறவுகளை புரிந்து கொள்ளக்கூடும்.
  • பொரருத்தமற்ற செயல்பாடுகளில் ஈடுபடுவது.
  • ஆபத்தான விஷயங்களைக் கையாள முயற்சிப்பது
  • நம் உடலில் நடக்கும் எல்லா செயல்பாடுகளையும் மூளைதான் கட்டுப்படுத்துகிறது. மூளை என்பது நியூரான் என்று சொல்லக்கூடிய செல்களால் ஆனது. இந்த நியூரான் மின்னணு சமிக்ஞைகள் மூலம் செய்திகளை பரப்புகின்றன. இந்த நியூரான்களுக்கு இடையே உள்ள
  • தொடர்புகள்தான் மூளையில் நடக்கும் எல்லாவற்றையும் தீர்மானிக்கின்றன.

மூளை எப்படி வளர்கிறது?

முழுக்க, முழுக்க மரபணுக்கள்தான் காரணம் என்று ஒரு காலத்தில் நம்பப்பட்டது. ஆனால், சமீபத்திய ஆராய்ச்சிகளில் தெரிய வருவது மரபணுக்கள் மட்டுமே காரணம் இல்லை என்பதுதான். ஊட்டச்சத்தான உணவு, அரவணைப்பான பெற்றோர்கள், தொடர்ந்து கிடைக்கக்கூடிய அனுபவங்கள், உடலுக்கான செயல்பாடுகள் போன்ற அனைத்தும் இணைந்துதான் குழந்தையின் மூளை வளர்ச்சி தூண்டப்படுகிறது.

நம் மூளையின் உண்மையான வளர்ச்சி அனுபவங்கள் சார்ந்தே அமைகிறது. வாழ்க்கையின் வெற்றிக்கு உணர்வுசார் நுண்ணறிவு மிக மிக முக்கியம். உணர்ச்சிகளை ஒழுங்குபடுத்தும் மூளையின் இணைப்புகள் அனுபவங்கள், மூலம்தான் வலுப்படுகின்றன. உணர்ச்சிகளுக்கு பபரறுப்பான மூளையின் பகுதி முன்னதாகவே முதிர்ச்சியடைந்து விடுகிறது. ஆனால், சுயக்கட்டுப்பாடு, உணர்ச்சிகளை கையாள்வது, தர்க்கரீதியான சிந்தனை, எது சரி எது தவறு என்று ஆராயும் திறன், பின் விளைவுகளை யோசித்து முடிவெடுக்கும் திறன் போன்ற செயல்பாடுகளை உள்ளடக்கிய மூளையின் பகுதி பின்னர்தான் முதிர்ச்சி அடைகிறது. வளரிளம் பருவம் முடிந்து, வளர்ந்து பெரியவர்கள் ஆகும் வரை இந்த வளர்ச்சியின் முதிர்ச்சி தொடர்கிறது.

மகிழ்ச்சி, நம்பிக்கை, எதிர்நீச்சல் போடும் சுபாவம், பிறர் நிலையில் நின்று பார்க்கும் திறன் இவையெல்லாம் ஒருவரின் வாழ்க்கைத் திறன்களாக வேண்டுமெனில் இளம் வயதில் அவர்களுக்குக் கிடைக்கும் பராமரிப்பு மிக மிக அவசியமாகிறது. இந்தப் பராமரிப்பால்தான் மூளையில் இந்த தொடர்பு தூண்டப்பட்டு உணர்வுரீதியாக வளர்ச்சி நடக்கிறது. வளரிளம் பருவத்தினரின் ஆரோக்கியமாக உடல், மன, உணர்வு வளர்ச்சிக்கு நம் வழிகாட்டுதல் மிக அவசியம்.

வளரிளம் பருவம் என்பது பிரச்சனைகள் நிறைந்த பருவமல்ல, பிரச்சனையாக பார்க்கப்படுகின்ற பருவம். உங்களுக்கு ஒரு பிரச்சனை வரும்பொழுது, பிரச்சனை, பிரச்சனை என்று சொல்லி புலம்புவீர்களா? அல்லது பிரச்சனையை ஒரு சவாலாக நினைத்து எதிர் கொள்ள பார்ப்பீர்களா? குழந்தைகள் வளர்ந்து கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் முழு மனிதராக வளர உங்கள் வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. அவர்களோடு பிரச்சனை வரும் பொழுது அவர்களுக்கு உலகை புரிய வைக்க எதிர் கொள்ள கிடைத்த ஒரு சந்தர்ப்பமாக பாருங்கள்.

சந்தர்ப்பமாக பார்த்தால், சவாலாக ஏற்றுக்கொண்டு எதிர்கொள்வீர்கள். புரியாமல், பிரச்சனையாக மட்டும் பார்த்தால், அதை அவர்களின் கோளாறாகவே அணுகுவீர்கள். யோசித்து பாருங்கள் அவர்கள் எவ்வளவு பாவம் என்று. அவர்களின் நிலையை கடந்து வந்த உங்களாலேயே அவர்களுக்கு சரியானபடி விளக்க முடியவில்லை என்றால் வேறு யார் வழிகாட்டுவார்கள்?

உங்கள் வளரிளம் பருவத்தில், நீங்களும் இப்படித்தான் பெரிய உளைச்சலோடு இருந்தீர்கள். அப்பொழுது உங்கள் பெற்றோர்கள் மேல் உங்களுக்கு வகரபம் வந்ததா? இல்லையா நவீன யுகத்தில் பிரச்சனைக்கான காரணங்கள் வேறுபட்டிருக்கலாம். (செல்போன், கம்ப்யூட்டர், ஜீன்ஸ் பேண்ட், உணவுகள்) ஆனால் இதே போல் உங்களுக்கும் உங்கள் பெற்றோர்களுக்கும் உடை, உணவு பற்றி பிரச்சனைகள் இருந்ததா இல்லையா? அறிவுரையாக இல்லாமல் அவர்களை தோழமையோடு அணுகிதான் இதை சாத்தியப்படுத்த முடியும்.

பெரியவர்கள் என்ன செய்யலாம்?

  • முட்டாள்தனமாக பேசாதே, யோசிக்காதே என்று அவர்கள் தங்களால் சிந்திக்க முடியும் என்று சொல்லி நம்புவதை குலைக்காதீர்கள்.
  • ஒரு விஷயத்தில் விவாதிக்க அனுமதியுங்கள். ஆனால் விவாதிக்கும்பொழுது சில சட்டதிட்டங்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று சொல்லுங்கள். மோசமான வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது. சொல்ல வருகின்ற கருத்தை நாகரீக முறையில் பேச வேண்டும்.
  • கோபக்கூடாது, அடிப்பது, பொருட்களை வீசி எறிவது போன்றவை கூடாது, உணர்ச்சி வசப்பட்டு, அழுது ஆர்ப்பாட்டம் செய்யக்கூடாது.
  • அவர்கள் தர்க்கத்தை (Logic) தவறு என்று சொல்லாதீர்கள். மாறாக எதன் அடிப்படையில் அவர்கள் அந்த முடிவுக்கு வந்தார்கள் என்று கேளுங்கள்.
  • (எ-டு) படிப்பை விட்டுவிட்டு அந்தப் பையனுடன் ஓடிப்போகலாம் என்று நினைக்கிறாய், ஆமாமா, இல்லையா –பதில் சொல்லு என்று கேள்வி கேட்கும் பொழுது, கோபத்திேலா, பயத்திலோ, எரிச்சலிலோ அவர்கள் ஆமாம்- அப்படித்தான் என்பார்கள். அல்லது இல்லை அப்படியில்லை என்று பரிதாபமாக சொல்வார்கள்.
  • இதைவிட, படிக்கின்ற காலத்தில் காதலிக்கிறாயா, மேல் என்ன செய்ய நினைக்கிறாய். எதனால் அந்தப் பையனை பிடிக்கும் என்ற அவர்கள் சிந்திக்கும் திறனை பயன்படுத்தும்படியாக பேசுங்கள்.
  • ஒரு விஷயம் பற்றி அவர்கள் ஆழ்ந்து யோசிக்கும்படி தகவல்களை பெற்றுத் தர முயலுங்கள். தகவல்கள் என்பது, உங்கள் விருப்பத்தை அவர்களை ஏற்றுக்கொள்ள செய்ய அல்ல. அவர்களே, அவர்களின் சிந்திக்கும் திறனை பயன்படுத்த.
  • மேற்படிப்பு போன்ற விஷயங்களில் ஆசிரியர், ஊரில் நன்கு படித்தவர் என வழிகாட்டக்கூடியவரை அணுகி பேச ஏற்பாடு செய்துக்கொடுங்கள். அன்றாட நடைமுறைகளுக்கு ஒரு கால அட்டவணை இருந்தால் இந்தப் பிரச்சனை வராது.

எந்நேரமும் தன்னை ஆக்கப்பூர்வமான விஷயங்களில் ஈடுபடுத்திக் கொள்பவர்களுக்கு இந்தப் பிரச்சனை வராது.

Adolescent Problem in Tamil
Adolescent Problem in Tamil
  • 1. உடல் ரீதியான வளர்ச்சிக்கு வளரிளம் பருவத்தினருக்கு, ஊட்டச்சத்தான உணவு, விளையாட்டு, ஓய்வு, நல்ல தூக்கம் தேவை. இவற்றை பெரியவர்கள் உறுதி செய்ய வேண்டும்.
  • 2. உணர்வுகளை கையாள்வதற்கு கற்றுத்தர வேண்டும்
  • 3. படம் வரைதல், எழுதுதல், விளையாட்டில் ஈடுபடுவது பல

கலைகளை கற்பது – இவை அவர்களுடைய மனரீதியான ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவும்.

வீட்டிலும் சரி, பள்ளியிலும் சரி, அவரகவளரடு சேர்ந்து ஒரு நேர அட்டவணையை உருவாக்குங்கள். இப்படிப்படட ஒழுங்கு, மூளை வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்க உதவும். தூங்குவதற்கும் இந்த நேர அட்டவணை அவசியம். வளரிளம் பருவத்தில் இரவில் நீண்ட நேரத்திற்கு டி.வி. பார்ப்பது, செல்போனை பயன்படுத்துவது இதற்கு நேர ஒழுங்கை அவர்களோடு சேர்ந்து தீர்மானியுங்கள். ஆரோக்கியமான தூக்கத்திற்கும், மூளை வளர்ச்சி தூண்டுதலில் ஒரு பங்கிருக்கறது.

படிப்பாக இருந்தாலும், ஒரு ஜீன்ஸ் பேண்ட், சுரிதார் வாங்குவதாக இருந்தாலும். நாலு கடை ஏறி இறங்கி, நிறம், தரம், விலை பார்த்து வாங்க வேண்டியதன் அவசியத்தை சொல்லிக்கொடுங்கள். தகவல் திரட்டி முடிவெடுப்பது ஒரு நிதானத்தை கொடுக்கும். சரியான முடிவினை கொடுக்கும். ஏனோதானேவென்று செயல்படுவதிலிருந்து காப்பாற்றும்.

வளரிளம் பருவத்தினர் ஆக்கப்பூர்வமான அறிவு வளர்ச்சியை பெற நாம் என்ன செய்யலாம்?

  • உங்களுடைய விவாதத்தில் அவர்கள் கருத்துக்கும் இடம் கொடுங்கள்.
  • அவர்கள் சொந்தமாக சிந்தித்து தங்கள் கருத்துக்களை உருவாக்கிக்கொள்ள ஊக்குவியுங்கள்.
  • இலக்குகளை தீர்மானிக்க உதவுங்கள்.
  • எதிர்காலம் பற்றி யோச்சிக்க தூண்டுங்கள்
  • அவர்கள் எடுக்கும் நல்ல முடிவுகளுக்கும் நல்ல செயல்களுக்கும் பாராட்டுங்கள்.
  • தவறான முடிவுகளை விமர்சிக்காமல்,எப்படி அவை தவறானவை என்று யோசித்து புரிய வையுங்கள்.
  • நடைமுறை சட்ட திட்டங்களை அமல்படுத்தும் பொழுது கட்டளைகளாக சொல்லாமல், அவற்றால் நீண்ட காலத்திற்குக் கிடைக்கக்கூடிய பலன்களை பற்றி விளக்கி ஏற்றுக்கொண்டு அமல்படுத்த உதவுங்கள்.
1. சுயக்கட்டுப்பாடு/ஒழுங்கு:

தன்னுடைய வேலைகள், உணவு, உறக்கம் நேர மேலாண்மை- இதுபோன்ற விஷயங்களைப் பற்றி தொடர்ந்து பெரியவர்கள் போதித்துகொண்டு இருப்பதை விட, இவற்றுக்கான தேவையை உணரச் செய்து, வளரிளம் பருவத்தினர் தாங்களாகவே தங்க ளுக்கான வரையறைகளை வரையறுத்துக்கொள்ள உதவுங்கள். கெஞ்சுவது, ஓயாமல் நினைவூட்டுவது போன்ற பெரியவர்களின் செயல்களினால் சுயக்கட்டுப்பாட்டை உண்டாக்க முடியாது. பொறுப்புணர்சிகளுக்குப் பதிலாக குழந்தைகளுக்கு பெரியவர்கள் மேல் கோபம்தான் உண்டாகும்.

2.சமூகத்திறன்கள்:

குழந்தைகளாக அவர்கள் இருந்தவரை மற்றவர்கள் அவர்களை கையாண்டார்கள். ஆனால் வளரிளம் பருவத்தில் வளர்ந்து விட்டதாலேயே அவர்கள் எப்படி மற்றவர்களோடு பேச வேண்டும், பழக வேண்டும் என்று கற்றுக்கொடுங்கள். நிமிர்ந்து, நேராக கண்களைப் பார்த்து பேசக் கற்றுக்கொடுங்கள்.

3 தன்னம்பிக்கை/தைரியம்:

அன்றாட நடைமுறைகளில் திட்ட வட்டமான சட்டதிட்டங்களை குழந்தைகளோடு சேர்ந்து உருவாக்கி அவற்றை அவர்கள் தொடர்ந்து பின்பற்றுவது குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையை வளர்க்கும். (உ.ம்) நேரத்திற்கு எழுந்து சரியாக சாப்பிட்டு, நேரத்திற்கு பஸ் நிறுத்தத்திற்கு வர முடிந்தால் எல்லாம் சரியாக நடக்கிறது என்று உணர்வு ஆளுமையை வளர்க்கும் நேர ஒழுங்கின்றி செய்யும்பொழுது, பதட்டம் வரும், தன்னைப்பற்றிய நம்பிக்கைக் குறையும். இதுபோன்ற செயல்களைப் பெற்றோர்தான் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று நாம் (ஆசிரியர்கள்) எதிர்பார்க்கக் கூடாது. நாமே நம் பள்ளிக் குழந்தைகளை இப்படிப்பட்ட செயல்பாடுகளில் வழி நடத்தலாம்.

Related Articles

Latest Posts