TN Tamil Language Exam | தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வு | மாதம் ரூ 1500 பெறலாம்
TN Tamil Language Exam | தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வு
அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, பள்ளி மாணவ, மாணவியர்களின் அறிவியல், கணிதம், சார்ந்த ஒலிம்பியாய்டு தேர்வுகளுக்கு பெருமளவில் தயராகி பங்கு பெறுவதை போன்று தமிழ் மொழி இலக்கியத் திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் 2022-2023ஆம் கல்வியாண்டு முதல் தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வு நடத்தப்பட உள்ளது.
உதவித்தொகை
இத்தேர்வில் 1500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பள்ளி கல்வித்துறை வழியாக மாதம் ரூ 1500 வீதம் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும். இத்தேர்வில் 50 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களும், மீதமுள்ள 50 சதவீதத்திற்கு அரசு பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பிற தனியார் பள்ளி மாணவர்களும் தேர்வு செய்யப்படுவார்கள்.
பாடத்திட்டம்
தமிழ்நாடு அரசின் 10ஆம் வகுப்பு தர நிலையில் உள்ள தமிழ் பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறி வகையில் தேர்வு நடத்தப்படும்.
Also Read: Education Loan in Tamil | கல்விக்கடன் பெறுவது எப்படி?
தேர்வு எங்கு நடக்கும்
அனைத்து மாவட்டங்களிலும் இத்தேர்வு நடத்தப்படும்.
தேர்வு தேதி?
2022-2023ம் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் (சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, உட்பட) 11ம் வகுப்பு மாணவர்கள், 1.10.2022 (சனிக்கிழமை) அன்று நடைபெற உள்ள இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது. இத்தேர்விற்கு மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளியின் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
தேர்வு கட்டணம்?
எனவே மாணவா்கள் இத்தேர்விற்கான விண்ணப்பங்கள் என்ற
இணையதளம் மூலம் வரும் 22ம் தேதி முதல் செப்டம்பர் 9ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வு கட்டண தொகை ரூ.50 சேர்த்து சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரிடம் சமர்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
விண்ணப்பிக்க கடைசிநாள்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 9.9.2022.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.