You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

TN State Good Teacher Award நல்லாசிாியர் விருது விற்பனையா? சங்கம் பரபரப்பு அறிக்கை

Typing exam apply Tamil 2023

TN State Good Teacher Award நல்லாசிாியர் விருது விற்பனையா? சங்கம் பரபரப்பு அறிக்கை

TN State Good Teacher Award

கலை ஆசிரியர்கள் நல சங்கம் மாநில தலைவர் எஸ்ஏ ராஜ்குமார் வெளியிட்ட அறிக்கை:

ஆட்சிகள் மாறினாலும் நல்லாசிரியர் விருதுகள் முறைகேடுகள் காட்சிகள் மாறுவதில்லை. ஒவ்வோரு ஆண்டும் நல்லாசிரியர் விருது விதிமுறைகள் மாற்றம் செய்து அரசாணை வெளியிட்ட வண்ணம் உள்ளது பள்ளி கல்வித்துறை.

ஆனால், கோவை மாவட்டத்தில் மட்டும்  நல்லாசிரியர் விருது விதிமீறல் ஒவ்வொரு ஆண்டும் அரங்கேறிய வண்ணம் உள்ளது. கடந்த ‌2015 ம் ஆண்டு மந்திரபதி என்ற தலைமை ஆசிரியர் மாவட்ட கல்வி அலுவலகத்தில் மாற்றுப் பணியில் இருந்த போது நல்லாசிரியர் விருது வேண்டி விண்ணப்பித்தார். விருது வழங்கிய நாளில் பள்ளி தலைமை ஆசிரியர் ஆக‌ விருது பெற்றார். மாவட்ட கல்வி அலுவலகத்தில் பணி செய்யும் ஒருவருக்கு எப்படி விருது சென்றது என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் கலை ஆசிரியர் நலம் சங்கம் வழக்கு தொடர்ந்தது இன்று வரை கோவை மாவட்டம் ராஜ்குமார் ஐ மறக்கவில்லை.

Read Also: State Good Teacher Award 2022 PDF

இப்போது இந்த ஆண்டு நேர்மையான ஆட்சி நடக்கும் தி.மு.க.ஆட்சியில் கூட ஒரு கல்வி மாவட்ட கல்வி அலுவலர் (D.E.O) தன் கடமை மறந்து தான் தலைமை ஆசிரியர் ஆக பணி செய்யும் அதே பள்ளியை சேர்ந்த ஓவிய ஆசிரியைக்கு நல்லாசிரியர் விருது பட்டியலில் பெயர் வந்துள்ளது. மந்தனம் என்று சொல்லப்படும் ரகசியம் காக்கும் பொருப்பில் உள்ள அந்த அலுவலர் தன் பள்ளி ஆசிரியர்க்கு விருது கிடைக்க செய்தது அதிர்ச்சி அளிக்கிறது.

இதே போல் சொந்தமாக யூடியூப் மூலம் வருவாய் தேடும் ஆசிரியர் பெயர் நல்லாசிரியர் விருது பட்டியலில் பெயர் வந்துள்ளது. காவல் நிலையத்தில் குற்ற வழக்கு சந்தித்த பெண் ஆசிரியர்க்கு நல்லாசிரியர் விருது கிடைத்ததாக கூறப்படுகிறது. நல்லாசிரியர் விருதுகள் கோவை மாவட்டத்தில் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது என்று தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது.

யூடிபில் பாடம் நடத்துபவர்களுக்கும், சமூக வலைதளங்களில் மாணவர்கள் மீது அக்கறை உள்ளது போன்று போலி விளம்பரம் ேதடும் ஒரு சில ஆசிரியர்களுக்கு அதிகாரிகள் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது என்று ஆசிரியர்கள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

ஆட்சி மாறினாலும் கோவை மாவட்டத்தில் தனக்கு வேண்டிய பள்ளி ஆசிரியர் தான் அதிகாரிகளால் பரிந்துரை செய்யப்படுகிறார்கள். தமிழக முதல்வர் அவர்கள் கோவையில் நல்லாசிரியர் விருதுகள் நடந்த விதிமீறல் பற்றி ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.