செமஸ்டர் தேர்வு: தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் ஆன்லைன் முறையில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
கல்லூரிகளில் தேர்வுகள் நடத்தப்படுவது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களைச் சந்தித்தார். கொரோனா தொற்று பரவல் கருத்தில் கொண்டு மீண்டும் ஆன்லைன் முறையில் செமஸ்டர் தேர்வுகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஒரே மாதிரியான முறையில் ஆன்லைனில் தேர்வுகள் நடத்தப்படும் என அவர் கூறினார்.
பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பிப்ரவரி 20ஆம் தேதி வரை பல்கலைக்கழகங்கள் அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் ஆன்லைன் முறையில் செமஸ்டர் தேர்வு நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். தேர்வுகள் மற்றும் நேரடி முறையில் நடத்தப்படும் என அவர் கூறினார்.
பாலிடெக்னிக் கல்லூரிகளில் தேர்வுகள் ஆன்லைன் முறையிலேயே நடத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
READ ALSO : செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்த வேண்டும் – கல்வி மேம்பாட்டு குழு
செமஸ்டத் தேர்வு:
அமைச்சர் பொன்முடி கூறியதாவது, குளறுபடிகள் ஏதும் நடக்காதபடி, ஒழுங்காக நேர்மையாக அதே நேரத்தில், தேர்வு எழுதுபவர்களும் தவறுகள் செய்யாதவாறு, அதையும் கண்காணிக்கும் வகையில் இந்த தேர்வுகள் நடத்தப்படும்.
மேலும் அவர் கூறியதாவது, கொரோனா பரவல் இருந்தால் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும், கொரோனா பரவல் இல்லையென்றால் வழக்கமான நடைமுறையில் தேர்வுகள் நடத்தப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
முன்னதாக, கல்வி அமைப்புகள் காலதாமதம் செய்யாமல், தேர்வுகள் ஆன்லைனில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆன்லைன் தேர்வுக்கு சில ஆசிரியர் சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.