தமிழக அரசு செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வி மேம்பாட்டு குழு வலியுறுத்தி உள்ளது.
செமஸ்டர் தேர்வுகள் தொடர்பான மனு:
இதுதொடர்பாக, கல்வி மேம்பாட்டு குழுவின் ஒருங்கிணைப்பாளர் க.லெனின் பாரதி உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக, அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது,
கொரோனா தொற்று தீவிரம் அடைந்து வரும் சூழலில் தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை காலம் தாழ்த்தாமல் கல்லூரிகள் மற்றும் பல்லைக்கழகங்களின் செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்துவதே சிறந்தது.
இரண்டாம் பருவ பாடங்கள் நடத்திக்கொண்டு இருக்கும் வேளையில் இன்னும் முதல் பருவத்தேர்வே நடத்தாமல் இருப்பது கல்வி ஆண்டு குறித்த சிக்கலை உருவாக்கும். தொற்று பரவல் என்று முற்றுபெறும் என யாரும் அறுதியிட்டு கூற முடியாத நிலையில், தேர்வுகளை ஆன்லைன் வழியே நடத்துவது ஒன்றே கால விரையத்தை தவிர்க்கும் சரியான வழிமுறை என்று கருதுகிறோம்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

செமஸ்டர் தேர்வுகள் பேராசிரியர்கள் கருத்து:
மேலும் சில பேராசிரியர்கள் கூறும்போது, தமிழக அரசு காலதாமதம் செய்தால், கல்லூரிகளில் படிக்கும் மாணவா்கள் கல்வியாண்டு பாதிக்கக்கூடும். குறிப்பாக, இளங்கலை, முதுகலை படிப்புகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் உயர் கல்வி தொடர்வதற்கோ அல்லது வேலைக்கு செல்வதற்கோ சிக்கலை ஏற்படுத்தும்.
இந்த 20 நாட்கள் விடுமுறையால், படிப்பின் மீது ஆா்வம் மாணவர்கள் மத்தியில் குறைய வாய்ப்பு உள்ளது. உடனடியாக ஆன்லைன் தேர்வு நடத்துவதற்கும், வகுப்புகள் நடத்துவதற்கும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கோரிக்கையாக உள்ளது.
Comments are closed.