TN School Student Bus Pass Manual PDF 2023 | TNSED School Bus Pass | பள்ளி மாணவர்கள் பேருந்து பயண அட்டை
TN School Student Bus Pass Manual PDF 2023
பள்ளி கல்வித்துறை அந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், வகுப்பு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு புதிய பேருந்து பயண அட்டை பெற TNSED School அப்ளிகேஷனில் விண்ணப்பிக்க வேண்டும் உத்தரவிட்டுள்ளது.
எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறித்து கிழே கொடுக்கப்பட்டுள்ளது.
Step 1: வகுப்பு ஆசிரியர் TNSED Schools Appஇல் தனது user name password உள்ளீடு செய்து login செய்ய வேண்டும்
Step 2: வகுப்பு ஆசிரியர் Schemes Icon ஐ கிளிக் செய்ய வேண்டும்
Step 3: வகுப்பு ஆசிரியர் BUS Pass நலத்திட்டம் வழங்க வேண்டிய வகுப்பை கிளிக் செய்ய வேண்டும்
Step 4: வகுப்பு ஆசிரியர் BUS Pass நலத்திட்டம் வழங்க வேண்டிய Sectionஐ கிளிக் செய்ய வேண்டும்
Step 5: வகுப்பு ஆசிரியர் BUS Pass நலத்திட்டத்தை கிளிக் செய்ய வேண்டும்
Step 6: வகுப்பு ஆசிரியர் BUS Pass நலத்திட்டம் வழங்கப்பட வேண்டிய மாணவர்களின் அருகில் உள்ள Apply பட்டன்ஐ கிளிக் செய்ய வேண்டும்.
Step 7: தேர்வு செய்த மாணவரின் பெயர், முகவரி மற்றும் பிற விவரங்கள் STUDENT APPLICATION FORMஇல் தோன்றும்
Step 8: முதலில் மாணவரின் City விவரத்தை Type செய்ய வேண்டும். மாணவருக்கு Bus Pass விண்ணப்பிக்க மாணவரின் Bus Route Numberஐ பெற Select செய்ய வேண்டும்.
Step 9: மாணவரின் முகவரியில் உள்ள மாவட்டத்தின் பொறுத்து அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து Bus Route எண்கள் தோன்றும். மாணவரின் Bus Route எண்ணை தேர்வு செய்ய வேண்டும்
Step 10: மாணவரின் பயணம் தொடங்கும் பஸ் ஸ்டாப்பை குறிப்பிட Journey from - Residence ஐ கிளிக் செய்ய வேண்டும்.
Step 11: ஆசிரியர் Select செய்த Bus Route ஐ பொறுத்து பஸ் ஸடாப்களின் பட்டியல் தோன்றும். மாணவரின் பயணம் தொடங்கும் பஸ் ஸ்டாப்பை Select செய்ய வேண்டும்.
Step 12: மாணவரின் பயணம் பஸ் ஸ்டாப்பை குறிப்பிட Journey to School ஐ கிளிக் செய்ய வேண்டும்.
Step 13: மாணவரின் பயணம் முடியும் பஸ் ஸ்டாப்பை Select செய்ய வேண்டும்
Step 14: மாணவரின் பள்ளியில் கொடுக்கப்பட்டுள்ள புகைப்படம் தோன்றும். வேண்டுமானால் ஆசிரியர் சமீபத்திய புகைபடத்தை UPLOAD செய்யலாம். அனைத்து விவரங்களையும் சரிபார்த்த பின்பு SAVE பட்டன் ஐ கிளிக் செய்ய வேண்டும்.
Step 15: மாணவரின் பஸ் பாஸ் Apply செய்யப்பட்டு விட்டதால் Apply STATUS > Applied என மாற்றப்பட்டிருக்கும்.
Read Also: School Bus Safety Norms in Tamil
தலைமை ஆசிரியர் பங்கு
Step 1: தலைைம ஆசிரியர் TNSED Schools Appஇல் தனது user name password உள்ளீடு செய்து login செய்ய வேண்டும்.
Step 2: தலைைம ஆசிரியர் Schemes Icon ஐ கிளிக் செய்ய வேண்டும்
Step 3: தலைைம ஆசிரியர் Approvals பட்டன் ஐ கிளிக் செய்ய வேண்டும்.
Step 4: தலைைம ஆசிரியர் Bus Approval பட்டன் ஐ கிளிக் செய்ய வேண்டும்.
Step 5: தலைமை ஆசிரியர் பள்ளியில் பஸ்பாஸ் APPLY செய்யப்பட்டிருக்கும் மாணவர்களுக்கான விவரங்களை வகுப்பு வாரியாக பார்க்கலாம். தலைமை ஆசிரியர் BUS PASS APPLY செய்யப்பட்ட மாணவர்களை வகுப்புவாரியாக APPROVE செய்யலாம்.
Step 6: தலைமை ஆசிரியர் அப்ரூவ் செய்தவுடன் நீல நிறம் ரைட் டிக் பதிலாக பச்சை நிறம் டிக் ஆக மாற்றப்பட்டிருக்கும்.
Step 7: STUDENT APPLICATION ஐ கிளிக் செய்தால் தலைமை ஆசிரியர் பள்ளி அளவில் BUSPASS APPLY செய்யப்பட்ட மாணவர்களின் விவரங்களை பார்வையிடலாம். மாணவர்களுக்கு BUS PASS கிடைக்க அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
தலைமை ஆசிரியர் வகுப்பு ஆசிரியராக இருப்பின் அவருக்கு இரண்டு OPTIONS தோன்றும்.
1. BUS PASS-அவர் வகுப்பு மாணவர்களுக்கு பஸ்பாஸ் APPLY அப்ளை செய்ய வேண்டும்.
2. BUS PASS APPROVAL- பள்ளியில் உள்ள பஸ்பாஸ் APPLY செய்த அனை த்து மாணவர்களுக்கும் APPROVE செய்யலாம்.