அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
33.7 C
Tamil Nadu
Saturday, September 23, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

School Bus Safety Norms in Tamil | பள்ளி பேருந்து விதிகள் என்ன?

School Bus Safety Norms in Tamil | பள்ளி பேருந்து விதிகள் என்ன?

School Bus Safety Norms in Tamil

பெரும்பாலான பெற்றோர் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி, பள்ளி பேருந்திலேயே (School Bus) பயணிக்க வைக்கின்றனர். அது நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெற்றோராயினும் அல்லது ஏழை குடும்பத்தை சேர்ந்தவராயினும் கடனையாவது வாங்கி, குழந்தைகளை பள்ளி பேருந்துகளில் அனுப்ப முயற்சிக்கிறார்கள்.

ஏனென்றால், கடந்த 2010ம் ஆண்டு நாட்டையே உலுக்கிய கோவை பள்ளி மாணவர்கள் இருவரை, பள்ளிக்கு அழைத்து செல்லும் வேன் ஓட்டுநர் மோகன கிருஷ்ணன் மற்றும் கூட்டாளி மனோகரன் கடத்தி கொலை செய்த சம்பவம், அனைத்து பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆங்காங்கே, ஆட்டோ, கால்டாக்சி வாகனவிபத்து, அளவிற்கு அதிகமாக மாணவர்களை ஏற்றி செல்லுதல் (பள்ளி பேருந்துகள் உட்பட) உள்ளிட்ட அட்டகாசங்களும் இன்றையளவிலும் அரங்கேறிதான் வருகிறது.

Also Read: அறிவோம் தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கைகள் 2021

புயலுக்கு பின் அமைதி என்பது போல, தமிழக அரசு, தனியார் கல்வி நிறுவனங்களின் வாகனங்கள் இயக்குவது சார்ந்து தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் (பள்ளி வாகனங்கள் முறைப்படுத்துதல் மற்றும் கட்டுப்படுத்துதல்) சிறப்பு விதிகள் 2012 வகுத்தது.

இருந்தபோதிலும், தனியார் பள்ளிகளின் கவனக்குறைவாலும், கல்வி மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் பள்ளிகளை கண்காணிக்க தவறுவதாலும், பெற்றோர் சிறப்பு விதிகள் அறியான்மையாலும் இறுதியில் பாதிக்கப்படுவது பிஞ்சு குழந்தைகள், எதிர்கால தூண்கள்தான். விபத்து நடக்கும் போது மட்டுமே, ‘அய்யய்யோ’ என பதைபதைத்துவிட்டு, அடுத்த காரியத்திற்கு நகருகிறோம். இதுபோன்ற விவகாரத்தில் பெற்றோருக்கு கூடுதல் பொறுப்பு உள்ளது. என்ன என்பது குறித்து சிறப்பு விதிகள் 2012 மூலம் அறிந்துகொள்ளலாம்.

School Bus Safety Norms in Tamil பள்ளி வாகனப்பதிவு (Vehicle Registration):

School Bus Safety Norms in Tamil
School Bus Safety Norms in Tamil

பள்ளி வாகனங்கள் பதிவில், School Permit என்ற அனுமதியை போக்குவரத்து துறையிடம் பெற்ற பிறகே, பள்ளி வாகனம் மாணவர்கள் பயன்பாட்டிற்கு இயக்க வேண்டும் என்ற விதி உள்ளது. குறிப்பிட்ட காலவரையறுக்குள், பள்ளியில் இயங்கும் ஓவ்வொரு வாகனத்திற்கும் (School Bus) தரச்சான்று புதுப்பிக்க வேண்டும், இதுதவிர, மாவட்ட அளவிலான குழுவினால் (போக்குவரத்து துறை) ஆய்வு செய்யப்பட்டு, வாகனத்தின் தரத்தினை பராமரித்திட வேண்டும். வாகனம் காப்பீட்டு செய்து, அதனை தவறாமல் புதுப்பிக்க வேண்டும்.

பள்ளி வாகன பராமாிப்பு (School Vehicle Maintenance):

“பள்ளி வாகனம்” என்ற பெரிய எழுத்து வாகனத்தின் முன் மற்றும் பின்புறம் பெரிய எழுத்தால் எழுதப்பட்டிருக்க வேண்டும். பேருந்துகள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கினால், “பள்ளிப் பணிக்காக மட்டும்” என்று வாகனத்தின் முன், பின் எழுதியிருக்க வேண்டும். வாகனத்தில் முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவிகள் கண்டிப்பாக இருக்க வேண்டும் மற்றும் தீயணைப்பு கருவி உரிய காலத்தில் புதுப்பிக்கப்பட வேண்டும். “பாதுகாப்பு கிரில்” (Horizontal Grills) மற்றும் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும். பள்ளி வாகனங்கள் வேறுபாடாக தெரிய, மஞ்சள் வண்ணம் மட்டுமே பூசப்பட்டிருக்க வேண்டும். மாணவர்களின் புத்தக பை பாதுகாப்பாக வைக்க, இருக்கையின் அடியில் போதிய இடவசதி கொடுத்திருக்க வேண்டும் மற்றும் விதிகளின்படி, அவசரகாலவழி இருக்க வேண்டும். பள்ளி வாகனத்தின் ஏறும் படிக்கட்டுகளின் உயரம் விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

வாகன ஓட்டுநர், உதவியாளர் நியமனம் (Appointing Driver, Assistant):

பள்ளி வாகனம் இயக்குபவர்கள் கனரக ஓட்டுநர் உரிமம் பெற்று, குறைந்தது 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு வாகனத்திற்கும் தகுதிவாய்ந்த உதவியாளர் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். உதவியாளர் இல்லாமல், வாகனத்தை இயக்ககூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளி வாகனத்திலும், ஆசிரியர் நிலையில் ஒருவர் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் இருக்க வேண்டும். வாகனத்தை ஒட்டுநரின் உரிமத்தினை பள்ளி நிர்வாகங்கள் அவ்வப்போது, சரிபார்த்து அவை காலாவதியவதற்கு முன்பே உரிமத்தை புதுப்பிக்க வேண்டும்.

வாகன ஆய்வுக்குழு School Level Transport Committee

பள்ளி வாகனம் இயக்கும் ஓவ்வொரு பள்ளியிலும் “பள்ளி அளவிலான போக்குவரத்து குழு” (School Level Transport Committee) சிறப்பு விதி 10ன் கீழ் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த குழு மாதம் ஒருமுறை கூட்டப்பட்டு குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து உறுதி செய்யப்பட வேண்டும்.

அடுத்ததாக, வாகன ஓட்டுநர்களை பள்ளி அளவிலான போக்குவரத்து குழுவின் முன் வாகனத்தை ஓட்ட செய்து, அவர்களது இயக்கும் திறனை சோதிக்கப்பட வேண்டும். மாவட்ட அளவில், துறைகளுக்கு இடையேயான குழு (District Level Inter-Department Committee) அமைக்கப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்ய வேண்டும்.

அறிவோமா பொதுவான அறிவுரைகள்:

அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை மேல் (வாகன உட்புறத்தின் ஓட்டுநர் வலது மேல்பக்கத்தில் குறிப்பிட்டிருக்கும்) பள்ளி குழந்தைகளை வாகனத்தில் ஏற்ற கூடாது. குழந்தைகள் வாகனத்தில் ஏறும்போது, இறங்கும்போது, குழந்தைகள் படியின் அருகே நிற்கவில்லை என்பதை பார்த்து, உறுதி செய்துவிட்டு வாகனத்தை இயக்க ஆரம்பிக்க வேண்டும். குழந்தைகளை இறக்கவிடும்போது, அவரது பெற்றோர் அல்லது பதிவு செய்யப்பட்ட பாதுகாவலா்களிடமே குழந்தையை ஒப்படைக்க வேண்டும். குறிப்பாக, குழந்தைகள் வாகனத்தில் ஏறி, இருக்கையில் அமர்ந்த பிறகே வாகனத்தை இயக்க வேண்டும்.

பள்ளி நிர்வாகிகளுக்கான சிறப்பு அறிவுரைகள் (Instructions for School Authorities)

பள்ளி குழந்தைகள் ஏற்றிக்கொண்டு வாகனங்கள் பள்ளி வளாகத்திற்கு வரும்போது, கண்டிப்பாக குறைந்தபட்சம் இரண்டு பள்ளி பணியாளர்கள் இருந்து அனைத்து குழந்தைகளையும் மிகவும் பாதுகாப்பாக இறக்கி வரிசையாக வகுப்பறைக்குள் அனுப்ப வேண்டும், அதுவரை வாகனத்தை இயக்ககூடாது. மாலைநேரத்தில், இரண்டு பணியாளர்கள் இருந்து, குழந்தைகளை வரிசையாக நிற்க வைத்து வாகனத்திற்குள் அனுமதிக்க வேண்டும். பள்ளி வளாகத்தில், தொடர்ச்சியாக பேருந்து இயக்காமல், குறிப்பிட்ட இடைவெளி பின்பற்றி வாகனத்தை இயக்க வேண்டும்.

பள்ளி வருகை தந்த ஒவ்வொரு குழந்தையும் பாதுகாப்பாக அவரவர் வீட்டிற்கு சென்றடைவதை உறுதி செய்வது பள்ளி நிர்வாகத்தின் தலையாய கடமை என்பதால், கவனகுறைவாக ஏதேனும் விபத்து ஏற்பட்டால், அதற்கு பள்ளி நிர்வாகமே முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.

பெற்றோா்/பாதுகவலர்களுக்கான அறிவுரைகள் (Instructions for Parent/Guardian/ Caretaker):

குழந்தைகள் பள்ளி வாகனத்தில் பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர், பாதுகாவலர் அவர்களுடன் வந்த வாகனத்தில் ஏற்றி அமரவைத்துவிட்டு வாகனம் இயக்கப்பட்ட பின்னர் அந்த இடத்தினை விட்டு செல்ல வேண்டும். பள்ளியிலிருந்து குழந்தைகள் வரும் நேரத்திற்கு முன்பாகவே உரிய நிறுத்தத்திலிருந்து வந்து குழந்தைகள் வாகனத்தில் இருந்து இறங்கும்போது, அவர்களது கையை பிடித்து இறக்கி வாகனத்தை விட்டு பாதுகாப்பான தொலைவில் நிறுத்திகொள்ள வேண்டும்.

வாகன ஓட்டுநர்கள் சரியான முறையில் வாகனத்தை இயக்குகிறார்களா என்பதை கண்காணித்து பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வாகனத்தில் உதவியாளர் உடன் வருகிறார்களா என்பதை உறுதி செய்து, உதவியாளர் நியமிக்கப்படும்பட்சத்தில், அதுகுறித்து போக்குவரத்து துறை மற்றுமு் கல்வித்துறை அலுவலர்களிடம் புகார் அளிக்க வேண்டும். பள்ளி நிா்வாகங்கள் வாகனங்களை இயக்கினாலும், அவற்றை முறையாக கண்காணிக்கும் வாய்ப்பு பெற்றவர்கள் என்பதால், பள்ளி வாகனங்கள் பாதுகாப்பாக இயக்கப்படுவதை கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்.

அதே நேரத்தில் பொறுப்புகள் பள்ளிகள், பெற்றோரே சார்ந்தது என்று கருதாமல், பள்ளிகல்வி மற்றும் வட்டார போக்குவரத்துதுறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் அவ்வப்போதாவது ஈடுபட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Articles

1 COMMENT

Comments are closed.

Latest Posts