TN School Education Minister latest News | விழா மேடையில் சரிந்த கல்வி அதிகாரிகள்
TN School Education Minister latest News
அமைச்சர் பங்கேற்ற விழாவில் மேடையின் படிக்கட்டு சரிந்ததை குறித்து பள்ளி கல்வி அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
பாரத சாரண – சாரணியர் இயக்கத்தின் மூன்று நாள் பயிற்சி முகாம் கடந்த 28ம் தேதி நீலகிரி மாவட்டம் குன்னூரில் துவங்கி, நேற்று முன்தினம் நிறைவடைந்தது. துவக்க விழாவில் பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.
Read Also: இந்தி திணிப்பு கல்விக்கு மிகப்பொிய பிரச்னை – அமைச்சர் பொன்முடி
அமைச்சர்கள் மற்றும் பள்ளி கல்வி அதிகாரிகள் மேடை ஏறியபோது, அதன் படிக்கட்டுகள் திடீரென சாிந்து விழுந்தன. அப்போது அருகில் நின்றவர்கள் உதவியதை அடுத்து, அமைச்சர்கள், பள்ளி கல்வி கமிஷனர் நந்தகுமார் கீழே விழாமல் தப்பினர். அவர்களுக்கு பின் மேடை ஏறிய தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி மற்றும் கல்வி அலுவலர்கள் சிலர் தடுமாறி கீழே விழுந்தனர். அவர்கள் அடிபடாத வகையில், அருகில் இருந்தோர் தாங்கி பிடித்ததால், வெளி காயங்கள் இன்றி தப்பினர்.
இந்த விவகாரம் அமைச்சர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. மேடை அமைப்பில் ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடி மற்றும் கவனக்குறைவே இதற்கு காரணம் என தெரியவந்துள்ளது.
இதுகுறித்து பள்ளி கல்வி கமிஷனர் நந்தகுமார் மற்றும் நீலகிாி மாவட்ட ஆட்சி தலைவர் அம்ரித் ஆகியோர் விசாரணையை துவங்கி உள்ளனர்.
நீலகிாி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் பாரத சாரண-சாரணியர் இயக்க அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கவும், தவறுக்கு காரணமானவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.