Hindi Imposition 2022 | இந்தி திணிப்பு கல்விக்கு மிகப்பொிய பிரச்னை – அமைச்சர் பொன்முடி
Hindi Imposition 2022
சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் சமூகவியல் துறை சார்பில் நடைபெற்ற பொன்விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு பேசியதாவது,
அறிவியல் வளா்ந்திருந்தாலும் சமூகத்தை பற்றி தெரிந்துகொள்வதற்கு சமூகவியல் மிக மிக அவசியம். அந்த சமூகவியல் வழியில்தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறாா், சமூகவியல் துறை சாதாரணமான படிப்பு அல்ல. எல்லாதுறைக்கும் தாயாக விளங்குகிறது.
Read Also: எம்.பில் பட்டப்படிப்பு கட்டாயம் நடத்த வேண்டும் – அமைச்சர் அறிவிப்பு
பாரம்பரியமிக்க பாடமாகவும் உள்ளது. ஒரு மாநிலத்தில் சமூக வரலாற்றை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும். கல்விக்கு என்று மிகப்பெரிய பிரச்னை வந்திருக்கிறது. இந்தி திணிப்பு என்பது அதிக அளவில் இருக்கிறது. விருப்பப்பட்டு படிப்பது என்பது வேறு, கட்டயாப்படுத்தி படிக்க சொல்வது என்பது வேறு.
இவ்வாறு அவர் பேசினார்.