தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கூட்டம் சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. இதில் 13 பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கலந்துகொண்ட நிலையில், உயர்கல்வி அமைச்சர் பொன்முடி கூட்டத்திற்கு தலைமை தாங்கினார் மற்றும் உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் பல்கலைக்கழகங்களின் நிர்வாக செயல்பாடுகள், செமஸ்டர் தேர்வுகள் நடத்துவது, தேர்வு முடிவுகளை வெளியிடுவது, மாணவர் சேர்க்கை நடத்துவது உள்ளிட்ட பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டது.
பின்னர், அமைச்சர் பொன்முடி கூறியதாவது, பல்கலைக்கழக துணைவேந்தர்களின் கருத்துகளை கேட்க கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அனைத்து பணி நியமனங்களிலும் வெளிப்படைதன்மை இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.பில் பட்டம் எடுத்துவிட்டதாக செய்தி வெளியானது. எம்.பில் வேண்டுமா அல்லது வேண்டாமா? என்பதில் இரு வேறு கருத்துகள் இருந்தாலும் கூட, எல்லா பல்கலைக்கழகங்களும் எம்.பில் படிப்பை நடத்த வேண்டும்.
துணைவேந்தர்களின் கருத்தைகளையும், மற்ற பிரச்னைகளையும் கேட்டறிந்து, அதுகுறித்து முதல்வருடன் கலந்துபேசி அறிவிப்போம். பல்கலைக்கழகங்களில் நடந்துள்ள குறைகள் பற்றி ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு பல்கலைக்கழக நியமனங்களை ஆய்வு செய்யும்.
பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு இந்த ஆண்டு வழக்கம்போல தொழில்நுட்ப கல்வி இயக்ககம்தான் நடத்தும். இவ்வாறு, அவர் கூறினார்.
Join WhatsApp Group | WhatsApp Group |
To Follow Telegram : | Telegram Link |
To Follow Facebook | Facebook Link |
To Follow Twitter | Twitter Link |
To Follow Instagram | Instagram Link |
To Follow Youtube | Youtube Link |