TN RTE Admission 2023 | ஆர்டிஇ மாணவர் சேர்க்கை தேதி எப்போது?
TN RTE Admission 2023
தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு வரும் ஏப்ரல் மாதம் 20ம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். அதன்படி மாநிலம் முழுவதும் உள்ள 8 ஆயிரத்திற்கும் மேலான தனியார் பள்ளிகளில் 1.1 லட்சம் இடங்கள் உள்ளன.
Read Also: அறிவோம் மழலையர் கல்வி
இந்த திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேருபவர்கள் 8ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் இலவசமாக படிக்கலாம். இவர்களுக்கான கல்வி கட்டணமாக தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு சாார்பில் ஆண்டுதோறும் சராசரியாக 350 கோடி வழங்கப்படுகிறது. இதற்கிடையே வரும் கல்வியாண்டு (2023-24) இலவச மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பதிவு ஏப்ரல் மாதம் 20ம் தேதி தொடங்க உள்ளதாக கல்வித்துறை வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் சிலர் கூறும்போது, ஆர்டிஇ திட்டத்தின் நடப்பாண்டு சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு இணைய வழியில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான வலைதள வடிவமைப்பு உட்பட முன்னேற்பாடு தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த பணிகளை முடித்து ஏப்ரல் 20ம் தேதி முதல் விண்ணப்ப பதிவை தொடங்க முடிவு செய்துள்ளோம். இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் பெற்றோர், பள்ளி சேர்க்கைக்கான தேவையான சாதி, இருப்பிடம், வருமான வாி சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை முன்கூட்டியே தயாராக வைத்துகொள்ள வேண்டும், இதுதொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும்,
என்றனர்.