TN REVISED 10th 12th REVISION TIME TABLE 2022|10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு அட்டவணை வெளியீடு
2021-2022-ஆம் கல்வியாண்டில் பள்ளியில் பயிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் மற்றும் இரண்டாம் திருப்புதல் தேர்வுகளுக்கான திருத்தியமைக்கப்பட்ட தேர்வுக் கால அட்டவணைகள அரசு தேர்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ளது.
TN REVISED 10th 12th REVISION TIME TABLE DIRECTION
அரசு தேர்வுகள் இயக்குனர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 2021-2022-ஆம் கல்வியாண்டில் பள்ளியில் பயிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் / இரண்டாம் திருப்புதல் தேர்வுகளுக்கான கால அட்டவணை முறையே 19.01.2022 மற்றும் 21.03.2022 ஆகிய நாட்களில் தொடங்குவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
கொரோனா தொற்று காரணமாக 19.01.2022 முதல் 31.01.2022 வரையிலான நாட்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் திருப்புதல் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது முதல் மற்றும் இரண்டாம் திருப்புதல் தேர்வுகளுக்கான திருத்தியமைக்கப்பட்ட தேர்வுக் கால அட்டவணைகள் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வுகள் குறித்த விபரத்தினை முதன்மைக் கல்வி அலுவலர்கள் நாள்.31.01.2022 ஆளுகைக்குட்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் வாயிலாக அனைத்து பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அறியும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், முதல் திருப்புதல் தேர்வுகள் நடைபெறும் நாட்களில் உள்ளாட்சித் தேர்தலுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெறும் தினங்களில் பள்ளித் தலைமையாசிரியர்கள் பயிற்சி வகுப்புகளுக்கு செல்லாத இதர ஆசிரியர்களைக் கொண்டு தேர்வினை எவ்வித புகாருக்கும் இடமளிக்காவகையில் சுமூகமாக நடத்திட உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறார்கள். அறிவுரைகளை பின்பற்றி திருப்புதல் தேர்வுகளுக்கான விடைத்தாட்கள் திருத்தும் பணியினை மேற்கொள்ளுமாறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
TN REVISED 10th, 12th REVISION TIME TABLE PDF 2022
TN REVISED CLASS 10th REVISION TEST TIME TABLE
TN REVISED CLASS 12th REVISION TEST TIME TABLE