You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

Revision Test: திருப்புதல் தேர்வு ஆன்லைன் நடக்கும்? - கல்வி அலுவலர் தகவல்

Tamil Nadu Children Education Policy 2021

10 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு ஆன்லைன் மூலம் நடத்த ஏற்பாடுகள் செய்துவருவதாக முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

ஏன் திருப்புதல் தேர்வு ரத்து?

1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே விடுமுறை அறவிக்கப்பட்டிருந்தது. கொரோன தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மாணவர்கள் நலன் கருதி, 10, 11 மறு்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இம்மாதம் இறுதி வரை தமிழக அரசு நேற்று விடுமுறை அறிவித்தது. இதுபோன்று, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திருப்புதல் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும், இத்தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்தது.

மேலும், பொதுத்தேர்வு எழதவிருக்கும் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்த வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறது. இதற்கிடையில், மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு, திருப்புதல் தேர்வு ஆன்லைன் மூலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதன்மை கல்வி அலுவலர் கீதா கூறியது என்ன?

கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் 10, 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான திருப்புதல் தோ்வு வரும் 19ம் தேதி முதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அரசின் அறிவிப்பு காரணமாக, நேரடி திருப்புதல் தேர்வு நடத்த முடியாது. இருப்பினும், மாணவர்கள் தேர்வுக்கு தயராகி உள்ளனர்.

எனவே, அவர்கள் நலன் கருத்தில் கொண்டு சம்மந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் மூலமாக ஏற்கனவே தயாரிக்கப்பட்ட தேர்வு அட்டவணையின்படி, வினாத்தாள் தயார் செய்து மாணவர்களின் வாட்ஸப் எண்ணிற்கு அனுப்பி, மாணவர்களை வீட்டில் இருந்து தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேர்வு எழுதிய பின், வினாத்தாளை மாணவர்கள் மீண்டும் வாட்ஸப்பில் அப்லோடு செய்து, சம்மந்தப்பட்ட பாட ஆசிரியர்களுக்கு அனுப்ப வேண்டும். அவர்கள் மதிப்பீடு செய்வார்கள். இதனால் மாணவர்கள் தேர்வு எழுதிய அனுபவம் கிடைக்கும் மற்றும் தொடந்து கற்றல் செயல்பாடுகளில் இருப்பார்கள். இவ்வாறு, அவர் கூறினார்.