TN Public Exam Private Candidate Hall Ticket Download 2025
தமிழகத்தில் 2024-2025 கல்வி ஆண்டிற்கான 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட் வௌியாகி உள்ளது. மார்ச், ஏப்ரல் மாதத்தில் தொடக்க உள்ள பொதுத்தேர்வு எழுத உள்ள தமிழகம் முழுவதும் உள்ள தனித்தேர்வர்கள் அரசு தேர்வுத்துறையின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
Read Also: பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் எப்படி தயராக வேண்டும்Read Also: பொதுத்தேர்வு டிப்ஸ் தனித்தேர்வர்கள் ஹால்டிக்கெட் டவுன்லோடு செய்வது எப்படி
Step 1:
https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
Step 2: முகப்பு பக்கத்தில் Hall Ticket என்று இருப்பதை கிளிக் செய்யவும்Step 3: தொடர்ந்து, இன்னொரு பக்கம் திறக்கும். அங்கு “SSLC/HIGHER SECONDARY FIRST YEAR/ SECOND YEAR MARCH / APRIL -2025 PRIVATE CANDIDATE HALL TICKET DOWNLOAD” என இடம்பெற்றிருக்கும்.
Step 4: அதனை கிளிக் செய்யவும். ெதாடர்ந்து ஒரு பக்கம் தோன்றும். Step 5: அதில் தேர்வர்களின் விண்ணப்ப எண் (Application Number) மற்றும் பிறந்த தேதி (Date of Birth) உள்ளிடவும். மேலும் Captcha பதிவிட்டு Search என இருப்பதை கிளிக் செய்யவும்.
Step 6: தனித்தேர்வர்களுடைய ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்துககொள்ளலாம்.ஹால்டிக்கெட்டில் இடம்பெற்று இருக்கும் சுயவிவரங்கள், தேர்வு தேதிகள் ஆகிய விவரங்கள் சரியாக உள்ளதா என சரிபார்த்துகொள்ளவும். குறிப்பாக, ஹால்டிக்ெகட் தேர்வு மையம், தேர்வு நகரம், தேர்வு நேரம் உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்று இருக்கும்.