TN Public Exam Hall Ticket News 2023 | பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் அடுத்தவாரம் வெளியீடு
TN Public Exam Hall Ticket News 2023
தமிழகத்தில் 10,11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முன்னேற்பாடுகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் அடுத்தவாரம் வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளன.
தமிழக பள்ளி கல்வி பாடத்திட்டத்தில் 10,11,12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. நடப்பு கல்வியாண்டிற்கான (2022-2023) பொதுத்தேர்வு கால அட்டவணை கடந்த நவம்பரில் வெளியிடப்பட்டது. அதன்படி 12ஆம் வகுப்புக்கு மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரையும், 11ஆம் வகுப்புக்கு மார்ச் 14ல் தொடங்கி, ஏப்ரல் 5ம் தேதி வரையும், 10ஆம் வகுப்புக்கு ஏப்ரல் 6ம் தேதி முதல் 20ம் தேதி வரையும் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இதில் 11,12ஆம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வு அடுத்த மாதம் நடைபெற உள்ளது.
Read Also : 12ம் வகுப்பு செய்முறை தேர்வு தேதி 2023
Read Also: உயர் கல்வி என்றால் என்ன
பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் தற்போது இறுதிபட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி 10ஆம் வகுப்பு தேர்வை 9,38,067, 11ம் வகுப்பு தேர்வை 7,87,783, 12ஆம் வகுப்பு தேர்வை 8,51,482 என மொத்தம் 25,77,223 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். தமிழ் வழியில் 12,91,605 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
இதுகுறித்து தேர்வுத்துறை அதிகாரிகள் கூறும்போது, பொதுத்தேர்வுக்கான முன்னேற்பாடுகள் இறுதிகட்டத்தை அடைந்துள்ளன. தற்போது மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் வழங்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த வாரம் முதல் ஹால்டிக்கெட் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.