Read Also: நாமக்கல் அரசு கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட்
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது, கல்லூரிகளில் பேராசிரியர்கள் அனைவரும் தங்களை மாணவர்களிடம் இருந்து தனியாக வேறுபடுத்தி தெரியும் விதமாகவும் தங்களது உடல் அமைப்பு மறைக்கும் விதமாகவும் மேல்அங்கி (ஒவர்கோட்) அணியவும் பேராசிரியர்களுக்குள் ஏற்றத்தாழ்வை வெளிப்படுத்தாதவாறு சீருடை போன்ற கண்ணியமான ஆடைகளை அணிய வேண்டுமாய் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுெதாடர்பாக, விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த அருள் என்கிற செபஸ்டின் என்பவர் பேராசிரியர்கள் கண்ணியமான ஆடைகளை அணிய வேண்டும் என்று புகார் செய்திருந்தார். அதன் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு பேராசிரியர்கள் மத்தியில் ஆதரவு மற்றும் எதிர்ப்பு குரல் எழுந்துள்ளது.