Namakkal Government Arts College Principal | நாமக்கல் அரசு கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட்
Namakkal Government Arts College Principal
நாமக்கல் மாவட்டம் மோகனூர் ரோட்டில் உள்ள
கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அரசு மகளிர் கலைக்கல்லூரியின் முதல்வராக பால்கிரேஸ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த மே மாதம், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அரசு கலைக்கல்லூரியில் இருந்து இடமாற்றம் செய்து, இக்கல்லூாியில் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
பணியில் சேர்ந்த ஒரே மாதத்தில், கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியைகளுடன் இவருக்கு கருத்து மோதல் ஏற்ப்பட்டது. இரவு 8 மணி வரை கலந்தாய்வு கூட்டம் என்ற பெயரில், பேராசிரியர்களை கல்லூரியில் இருக்க வைத்தார். மேலும், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு, தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழை வழங்காமல் காலம் தாழ்த்தினார்.
Read Also: இந்தி திணிப்பு கல்விக்கு மிகப்பொிய பிரச்னை – அமைச்சர் பொன்முடி
இதனால் அதிருப்தி அடைந்த மாணவர்கள், கல்லூரியின் எதிரே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல், கடந்த 2 மாதங்களுக்கு முன் நடைபெற்ற மாணவிகள் சேர்க்கை கலந்தாய்வையும், சரியாக நடத்தவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து இவர் மீது பல்வேறு புகார்கள், உயர் கல்வித்துறைக்கு சென்ற வண்ணம் இருந்தது. இந்தநிலையில், கல்வித்துறை செயலர் கார்த்திகேயன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
கல்லூரி முதல்வர் பால்கிரேஷ் கடந்ததாண்டு ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லூரியில் பணியாற்றியபோது, இவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்தது. இதையடுத்து இவர் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அரசு கலைக்கல்லூரிக்கு மாற்றப்பட்டார். அங்கு கல்லூரியில் இருந்த அம்பேத்கர் படத்தை அகற்றியதாக இவர் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டிருந்தது. பின்னர் அவர் நாமக்கல் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார்.