அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
22.3 C
Tamil Nadu
Sunday, December 10, 2023

TN Private School Fee Exemption | கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்கள் பள்ளி கட்டணம் ரத்து

TN Private School Fee Exemption | கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்கள் பள்ளி கட்டணம் ரத்து

TN Private School Fee Exemption

கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் பெறுவதில் இருந்து விலக்கு அளித்து தமிழக அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா காலத்தில் பல மாணவர்கள் தங்களது, தாய், தந்தையை இழந்தனர். ஏற்கனவே ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு தேவைப்படும் உதவிகளை வழங்கிடும் வகையில் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் சிறப்பு பணி (டாஸ்க்போர்ஸ்) தமிழக அரசு அமைக்கப்பட்டது.

தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்றால், பெற்றோர்களை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு அவர்களது பெயரில் தலா ரூ.5 லட்சம் டெபாசிட் செய்யப்படும். அந்த குழந்தைகளுக்கு 18வயது நிறைவடையும் போது அந்த தொகை வட்டியோடு வழங்கப்படும். பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம் வழங்கப்படும்.

Also Read: தனியார் பள்ளி கல்வி கட்டணம் – மாணவர்களை வகுப்பை விட்டு வெளியே அனுப்ப அதிகாரம் உண்டா?

இந்த குழந்தைகளுக்கு பட்டப்படிப்பு வரையிலான கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் அரசே ஏற்கும். அரசு காப்பகம் அல்லது விடுதிகளில் இல்லாது, உறவினர் பாதுகாவலர் ஆதரவில் வளரும் குழந்தைகளின் பராமரிப்பு செலவாக மாதந்தோறும் தலா ரூ.3 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு மே மாதம் 29ம் தேதி அறிவித்தார். அனைத்து அரசு நலத்திட்டங்களிலும் முன்னுரிமை அடிப்படையில் இக்குழந்தைகளுக்கும் நோய் தொற்றினால் கணவன் அல்லது மனைவியை இழந்து குழந்தைகளுடன் இருக்கும் பெற்றோருக்கும் வழங்கப்படும். இந்த நிலையில், தனியார் பள்ளிகளில் பயிலும் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து தமிழக அரசு இன்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக அரசு அறிவிப்பு என்ன?

இதுதொடர்பாக, பள்ளி கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த பெற்றோரிகளின் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் கல்வி பயின்று கொண்டு இருப்பின் அவர்களுக்கு கல்வி கட்டணம் பெறுவதில் இருந்து விலக்களித்து, தொடர்ந்து அவர்கள் அதே பள்ளியில் கல்வி பயில்வதை உறுதிசெய்தல் வேண்டும்.

தனியார் பள்ளிகளில் இந்த கல்வியாண்டில் இருந்து கல்வி கட்டணம் நிர்ணயம் செய்வதற்கு கருத்துருவினை உடனடியாக தனியார் பள்ளி கட்டண நிர்ணய குழுவிற்கு அனுப்பிட வேண்டும். அனைத்து பள்ளிகளுக்கும் கருத்துரு அனுப்பியதை உறுதிப்படுத்திட வேண்டும் அதனை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Latest Posts