TN Plus Two Original Mark sheet Download பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் செய்தி
TN Plus Two Original Mark sheet Download
அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, மே 2022, மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொது தேர்வு எழுதிய தேர்வர்களுக்கு (மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவு உட்பட), மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள்/மதிப்பெண் பட்டியல் 15.9.2022 அன்று முதல் வழங்கப்படும்.
Also Read: பிழையில்லா மதிப்பெண் சான்றிதழ் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்
பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி வாயிலாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையம் வாயிலாகவும் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை (original mark sheet)/ மதிப்பெண் பட்டியலினை (Statement of Mark) பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களை
www.dge.tn.gov.in இந்த இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.