பிழையில்லா மதிப்பெண் சான்றிதழ் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்| TN ERROR-LESS MARK SHEET
பிழையில்லா மதிப்பெண் சான்றிதழ்
பிழையில்லா மதிப்பெண் சான்றிதழ் அச்சிட்டு வழங்குவதற்கு ஏதுவாக பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து பள்ளி கல்வி ஆணையர் நந்தகுமார் அவர்கள் செயல்முறைகள் வெளியிட்டுள்ளார்.
பள்ளி கல்வியில் பத்தாம் வகுப்பு பொதுதேர்வு, 11ஆம் வகுப்பு (மேல்நிலை முதலாமாண்டு) மற்றும் 12ம் வகுப்பு (மேல்நிலை இரண்டாம் ஆண்டு) பொது தேர்வு மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் கோரி அதிக விண்ணப்பங்கள் பெறப்படுவதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து, பள்ளி மாற்றுச்சான்றிதழ், சேர்க்கை விண்ணப்பம் மற்றும் சேர்க்கை நீக்கல் பதிவேடு ஆகியவற்றில் மாணவர் பெயர், தந்தை மற்றும் தாயார் பெயர் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) பதிவு செய்வது தொடர்பாக பள்ளி கல்வித்துறை அறிவுரை வழங்கியுள்ளது.
பிழையில்லா மதிப்பெண் சான்றிதழ் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்
அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளிகளில் மாணவர் சோ்க்கையின்போது பிறப்பு சான்றிதழின் அடிப்படையில் மாணவரது பெயர், தாய், தந்தையர் பெயர் (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்), பிறந்த தேதி ஆகியவற்றை மாணவர் சேர்க்கை பதிவேட்டில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.
READ ALSO: அரசு தேர்வுகள் இயக்ககம் 11, 12ம் வகுப்பு அகமதிப்பீடு மதிப்பெண் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
2020-2021 கல்வி ஆண்டு முதல் அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மாற்றுச்சான்றிதழ்களில் மாணவரது பெயர், தாய், தந்தை பெயர், ஆகியவற்றை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிவு செய்து வழங்குவதற்கான கலங்கள் கொண்ட ஒரே மாதிரியான படிவத்தினை (uniform format) பயன்படுத்துதல் வேண்டும்.

பிழையில்லா மதிப்பெண் சான்றிதழ் – தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை பொது தேர்வுகளுக்கான பள்ளி மாணவர்கள் பெயர் பட்டியலின் அடிப்படையில் மதிப்பெண் சான்றிதழ் அச்சிட்டு வழங்கப்படுகின்றன. பெயர்பட்டியல் எமிஸ் –ல் உள்ள விவரங்கள் அடிப்படையில் தயாரிக்கப்படுவதால், பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களது பெயர், தாய்/தந்தை/பாதுகாவலரது பெயர் (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்) மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை எமிஸ் ல் பதிவேற்றம் செய்யும் பொழுது எவ்வித தவறும் இல்லாமல் சாியாக பதிவு செய்திருப்பதை உறுதி செய்தல் வேண்டும்.
மேலும் பள்ளி சேர்க்கை விண்ணப்பம், சேர்க்கை நீக்கி பதிவேடு மற்றும் பள்ளி மாற்றுச் சான்றிதழ்களில் தாய், தந்தை / பாதுகாவலர் பெயர் (தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும்) மற்றும் தாய்மொழி ஆகிய இனங்கள் புதிதாக எமிஸ்ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
பிழையில்லா மதிப்பெண் சான்றிதழ் – முதன்மை கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு
எனவே அனைத்து பள்ளிகளிலும் சேர்க்கை விண்ணப்பம், மாணவர் சேர்க்கை பதிவேடு மற்றும் பள்ளி மாற்றுச் சான்றிதழில், மாணவரது பெயர், தாய், தந்தை/பாதுகாவலர் பெயர் (தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும்), பிறந்த தேதி ஆகிய விவரங்கள் தவறின்றி தெளிவாக பதிவு செய்தல் தொடர்பாக அனைத்து நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் உாிய அறிவுரை வழங்குமாறு பள்ளி கல்வித்துறை, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.