Table of Contents
Do You Know About DGE Internal Marks? அரசு தேர்வுகள் இயக்ககம் 11, 12ம் வகுப்பு அகமதிப்பீடு மதிப்பெண் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
2021– 2022 கல்வியாண்டில் மேல்நிலை முதலாம் (பிளஸ் 1) ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு (பிளஸ் 2) பயிலும் மாணவர்களுக்கு ஒவ்வொரு பாடத்திற்கும் அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை கணக்கிட்டு வழங்கும் முறை பற்றிய அறிவுரைகள் மற்றும் நெறிமுறைகள் இதில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.
அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண் ஒதுக்கீடு (தொழிற்கல்வி செய்முறை தவிர்த்து): மொத்தம் 10 மதிப்பெண்கள்
மாணவர்கள் வருகை பதிவு – அதிகபட்சம் 2 மதிப்பெண்கள்
வருகைப் பதிவிற்கான மதிப்பெண்கள் வகுப்பாசிரியரால் கணக்கிட்டு வழங்கப்பட வேண்டும். கல்வியாண்டில் ஆரம்ப நாள் முதல் அரசு தேர்வுகள் இயக்ககத்தால் பின்னர் அறிவிக்கப்படும் நாள் வரை மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரியாத நாட்களின் அடிப்படையில், கீழ்க்கண்டவாறு வருகைப் பதிவிற்கான மதிப்பெண்களை கணக்கிட வேண்டும்.
A) 80 சதவீதத்திற்கு மேல் வருகை : 2 மதிப்பெண்கள்
B) 75 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை : 1 மதிப்பெண்
உள்நிலைத் தேர்வுகள் : அதிகபட்சம் 4 மதிப்பெண்கள்
(சிறந்த ஏதேனும் மூன்று தேர்வுகளின் சராசரி மதிப்பெண்ணை 4 மதிப்பெண்களுக்குக் கணக்கிடப்பட்டு வழங்கப்பட வேண்டும்.)
- ஒவ்வொரு பாடத்திற்கும் குறைந்த பட்சம் 4 உள்நிலைத் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.
- உள்நிலைத் தேர்வுகள் 40 முதல் 45 நிமிடங்கள் வரை நடைபெறும் வகையில், வகுப்பு நேரங்களிலோ அல்லது சிறப்பு வகுப்பு நேரங்களிலோ நடத்தப்பட வேண்டும்.
- ஒவ்வொரு பாடத்திற்குமான உள்நிலைத் தேர்வுகள் சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்களால் நடத்தப்பட வேண்டும்.
- உள்நிலைத் தேர்வுகள் நடத்தப்படும் தேதி பற்றிய விவரத்தினை மாணவர்களுக்கு குறைந்த பட்சம் இரு நாட்களுக்கு முன்பே சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர் அறிவிக்க வேண்டும்.
- குறிப்பிட்ட ஒரு பாடத்தின் (Subject) உள்நிலைத் தேர்வுக்கும், அதே பாடத்தின் அடுத்த உள்நிலைத் தேர்விற்கும் இடையில் குறைந்த பட்சம் 10 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும்.
- இரு வெவ்வேறு பாடங்களுக்கு இடையில் இந்த இடைவெளி இருக்க வேண்டிய அவசியமில்லை.
- 25 மதிப்பெண்களுக்கு உள்நிலைத் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். சம்மந்தப்பட்ட பாட ஆசிரியராலேயே வினாத்தாள் வடிவமைக்கப்பட்டு, மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.
- வினாத்தாள் மற்றும் விடைத்தாட்களை கோப்பில் வைத்திருக்கவேண்டும்.
- உள்நிலைத் தேர்வுக்கான மதிப்பெண் விவரத்தினை மாணவர்களுக்கு தெரிவித்து, விடைத்தாட்களில் அவர்களது கையொப்பத்தினை பெற வேண்டும்.
- உயிரியல் பாடத்தில், தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆகிய இரு பாடங்களுக்கும் சேர்த்து குறைந்த பட்சம் நான்கு உள்நிலைத் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.
- உள்நிலைத் தேர்வுகள் தொடர்பான கீழ்க்கண்ட படிவங்கள் அடங்கிய பதிவேடு சம்மந்தப்பட்ட பாட ஆசிரியரால் பராமரிக்கப்பட வேண்டும்.

iii. ஒப்படைவு / செயல் திட்டம் / களப்பயணம் : அதிகபட்சம் 2 மதிப்பெண்கள்
(மூன்றில் ஏதேனும் ஒன்று – உரிய பதிவேடுகள் பராமரிக்கப்பட வேண்டும்)
- பாடங்களுக்கேற்றவாறு ஒப்படைவு (Assignment) அல்லது செயல் திட்டம் (Project) அல்லது களப்பயண அறிக்கை (Field Visit Report) இவற்றில் ஏதேனும் ஒன்றினை சம்மந்தப்பட்ட பாட ஆசிரியர்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.
- ஆனால், மேற்குறிப்பிட்ட மூன்றில் ஏதேனும் ஒன்றினை மட்டுமே ஒரு வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஒரே சீராக (uniformly) ஒதுக்கீடு செய்தல் வேண்டும்.
கல்வி இணைச் செயல்பாடுகள்: அதிகபட்சம் 2 மதிப்பெண்கள்
அரசாணை (2டி) எண்.13, பள்ளிக் கல்வி துறை, நாள்.20.02.2018-ல் தெரிவித்துள்ளவாறு, கீழ்க்குறிப்பிட்ட 33 செயல்பாடுகளுள், குறையதபட்சம் ஏதேனும் மூன்று செயல்பாடுகளில் பங்கேற்றுள்ள மாணவர்களுக்கு அதிக பட்சம் 2 மதிப்பெண்கள் அகமதிப்பீடாக வழங்கப்பட வேண்டும்.


- மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அகமதிப்பீட்டு மதிப்பெண்கள் குறித்த விவரம், அறிவிப்புப் பலகை வாயிலாக மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.
- வகுப்பாசிரியர் ஒப்படைக்கும் பதிவேடுகளை தலைமையாசிரியர் பொதுத் தேர்வு நடைபெற்று முடிந்த நாளிலிருந்து ஆறு மாதங்கள் வரை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
- நீதிமன்ற வழக்கு அல்லது தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 ஆகியவற்றின்படி ஆவணங்கள் கோரப்படும்பொழுது, பதிவேடுகள் தலைமையாசிரியரால் ஒப்படைக்கும் வகையில் அமையதிருத்தல் வேண்டும்.
- மாணவர்களுக்கு அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண் வழங்கப்படும் பொழுது ஆசிரியர்கள் நடுநிலைமையுடன் செயல்பட வேண்டும். தலைமையாசிரியர் மாணவர்களுக்கு அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்கள் வழங்குவதை மிகவும் கவனத்துடன் கண்காணிக்க வேண்டும்.
B. தொழிற்கல்வி செய்முறை பாடத்திற்கான அகமதிப்பீடு (அதிகபட்சம் 25 மதிப்பெண்கள்)
i. மாணவர்கள் வருகைப் பதிவு : அதிகபட்சம் 5 மதிப்பெண்கள்
வருகைப் பதிவிற்கான மதிப்பெண்கள் வகுப்பாசிரியரால் கணக்கிட்டு வழங்கப்பட வேண்டும்.
கல்வியாண்டில் ஆரம்ப நாள் முதல் இவ்வியக்ககத்தால் பின்னர் அறிவிக்கப்படும் நாள் வரை மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரியாத நாட்களின் அடிப்படையில், கீழ்க்கண்டவாறு வருகைப் பதிவிற்கான மதிப்பெண்களை கணக்கிட வேண்டும்.
a) 80 சதவீதத்திற்கு மேல் வருகை : 5 மதிப்பெண்கள்
b) 75 சதவீதத்திற்கு மேல் 80 சதவீதம் வரை : 3 மதிப்பெண்கள்
அதாவது,
80.01% முதல் 100 % வரை- 5 மதிப்பெண்கள்
75.01% முதல் 80% வரை- 3 மதிப்பெண்கள்
ii. உள்நிலைத் தேர்வுகள் : அதிகபட்சம் 10 மதிப்பெண்கள்
(சிறந்த ஏதேனும் மூன்றுதேர்வுகளின் சராசரி மதிப்பெண்ணை 10 மதிப்பெண்களுக்குக் கணக்கிடப்பட்டு வழங்கப்பட வேண்டும்.)
- ஒவ்வொரு பாடத்திற்கும் குறைந்த பட்சம் 4 உள்நிலைத் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.
- உள்நிலைத் தேர்வுகள் 40 முதல் 45 நிமிடங்கள் வரை நடைபெறும் வகையில், வகுப்பு நேரங்களிலோ அல்லது சிறப்பு வகுப்பு நேரங்களிலோ நடத்தப்பட வேண்டும்.
- ஒவ்வொரு பாடத்திற்குமான உள்நிலைத் தேர்வுகள் சம்மந்தப்பட்ட பாட ஆசிரியர்களால் நடத்தப்பட வேண்டும்.
- உள்நிலைத் தேர்வுகள் நடத்தப்படும் தேதி பற்றிய விவரத்தினை மாணவர்களுக்கு குறைந்தபட்சம் இரு நாட்களுக்கு முன்பே சம்பயதப்பட்ட பாட ஆசிரியர் அறிவிக்க வேண்டும்.
- குறிப்பிட்ட ஒரு பாடத்தின் உள்நிலைத் தேர்வுக்கும், அதே பாடத்தின் அடுத்த உள்நிலைத் தேர்விற்கும் இடையில் குறைந்தபட்சம் 10 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும்.
- இரு வெவ்வேறு பாடங்களுக்கு இடையில் இந்த இடைவெளி இருக்க வேண்டிய
அவசியமில்லை. - 25 மதிப்பெண்களுக்கு உள்நிலைத் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். சம்மந்தப்பட்ட பாட ஆசிரியராலேயே வினாத்தாள் வடிவமைக்கப்பட்டு, மதிப்பீடு செய்யப்பட வேண்டும். வினாத்தாள் மற்றும் விடைத்தாட்களை கோப்பில் வைத்திருக்கவேண்டும்.
- உள்நிலைத் தேர்வுக்கான மதிப்பெண் விவரத்தினை மாணவர்களுக்கு தெரிவித்து, விடைத்தாட்களில் அவர்களது கையொப்பத்தினை பெற வேண்டும்.
- உள்நிலைத் தேர்வுகள் தொடர்பான கீழ்க்கண்ட படிவங்கள் அடங்கிய பதிவேடு சம்பயதப்பட்ட பாட ஆசிரியரால் பராமரிக்கப்பட வேண்டும்.

iii. ஒப்படைவு / செயல் திட்டம் / களப்பயணம் : அதிகபட்சம் 5 மதிப்பெண்கள்
(மூன்றில் ஏதேனும் ஒன்று – உரிய பதிவேடுகள் பராமரிக்கப்பட வேண்டும்)
- பாடங்களுக்கேற்றவாறு ஒப்படைவு (Assignment) அல்லது செயல் திட்டம் (Project)அல்லது களப்பயண அறிக்கை ((Field Visit Report) இவற்றில் ஏதேனும் ஒன்றினை சம்பயதப்பட்ட பாட ஆசிரியர்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.
- ஆனால், மேற்குறிப்பிட்ட மூன்றில் ஏதேனும் ஒன்றினை மட்டுமே ஒரு வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஒரே சீராக (uniformly) ஒதுக்கீடு செய்தல் வேண்டும்.
- ஒவ்வொரு பாடத்திற்குமான மதிப்பெண்கள் கீழ்க்காணும் படிவத்தில் பூர்த்தி செய்து சம்பயதப்பட்ட பாட ஆசிரியர்களால் பராமரிக்கப்பட வேண்டும்.
கல்வி இணைச் செயல்பாடுகள்: அதிகபட்சம் 5 மதிப்பெண்கள்
அரசாணை (2டி) எண்.13, பள்ளிக் கல்வி துறை, நாள்.20.02.2018-ல் தெரிவித்துள்ளவாறு, கீழ்க்குறிப்பிட்ட 33 செயல்பாடுகளுள், குறைந்தபட்சம் ஏதேனும் மூன்று செயல்பாடுகளில் பங்கேற்றுள்ள மாணவர்களுக்கு அதிக பட்சம் 5 மதிப்பெண்கள் அகமதிப்பீடாக வழங்கப்பட வேண்டும்.

மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அகமதிப்பீட்டு மதிப்பெண்கள் குறித்த விவரம் அறிவிப்பு பலகை வாயிலாக மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.
Directorate of Government Examination Class 11, 12 internal marks procedure PDF
Join WhatsApp Group | WhatsApp Group |
To Follow Telegram : | Telegram Link |
To Follow Facebook | Facebook Link |
To Follow Twitter | Twitter Link |
To Follow Instagram | Instagram Link |
To Follow Youtube | Youtube Link |