TN Part Time Teachers |பகுதிநேர ஆசிரியர்கள் புறக்கணிப்பு| ஆசிரியர்கள் கூட்டமைப்பு கல்வித்துறைக்கு கண்டனம்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு, நிறுவனத் தலைவர் சா.அருணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியா முழுவதும் அனைவரும் தங்கள் வீட்டின் மீது தேசிய கொடியை ஏற்றி சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் நம் உணர்வை வெளிப்படுத்த ஒன்றிய அரசு கோரிக்கை வைத்துள்ளது.
அந்த வகையில் மதிப்புமிகு தமிழ்நாடு அரசு தலைமை செயலாளர் அவர்களின் வழிக்காட்டுதலின்படி பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவுப்படி அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்பி ஒவ்வொரு ஆசிாியரும் தேசியக்கொடியை பெற்று தங்கள் இல்லங்களில் ஏற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வரவேற்கிறது.
அதேவேளையில்,
கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் ரூ.50 கொடுத்து தேசிய கொடியை பெற்று, அனைத்து வகை ஆசிரியர்களும் பெற்று தங்கள் இல்லங்களில் ஏற்ற அவரசர சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். ஆனால அஞ்சலகத்தில் அதிகபட்சமாக ரூ 25 பெற்று தேசியக் கொடி வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையில் கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் சுற்றறிக்கை வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ரூ. 50 எதன் அடிப்படையில் பெறப்படுகிறது என்பதை கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவிக்க வேண்டும்.
பகுதிநேர ஆசிரியர்கள் புறக்கணிப்பு
Read Also: பகுதி நேர ஆசிரியர்கள் அப்செட்
அதேபோன்று பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் தேசிய கொடியை பெறுவதில் இருந்து அவர்களை புறந்தள்ளபட்டுள்ளதை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு கண்டிக்கிறது, அவர்களும் இந்நாட்டு பிரஜைகள் என்பதை மறந்து விடக்கூடாது. பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கும் தேசியக்கொடி வழங்கி அவர்களும் சுதந்திர தினத்தை மகிழ்ச்சியாக கொண்டாட அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடவேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.