National Flag | தேசிய கொடி ரூ.50 கொடுத்து ஆசிரியர்கள் வாங்க வேண்டும் - பகுதி நேர ஆசிரியர்கள் அப்செட்
National Flag
சுதந்திர தினவிழாவை ஒட்டி, பகுதி நேர ஆசிாியர்கள் தவிர, மற்ற ஆசிரியர்கள், பணியாளர்கள், தேசிய கொடி வாங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, முதன்மை கல்வி அலுவலகத்தில் தேசிய கொடி விற்பனை செய்யப்படுகிறது.
Also Read: மாணவர் மன நலன் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த உத்தரவு
எமிஸ் இணையதளத்தில் உள்ள எண்ணிக்கைப்படி, ஆசிரியர்களும், அலுவலக பணியாளர்களும், ஒரு கொடிக்கு ரூ 50 செலுத்தி, வாங்க வேண்டும். பகுதி நேர ஆசிரியர்களுக்கு கொடி விற்பனை இல்லை. இன்று முதல் 19ம் தேதி வரை வீடுகளில் தேசிய கொடி ஏற்றி, அதை புகைப்படம் எடுத்து தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அவற்றை தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும். அவற்றை தலைமை ஆசிரியர்கள் தொகுத்து முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பகுதி நேர ஆசிரியர்கள் தரப்பில்,
சென்னையை சேர்ந்த ஓவிய ஆசிரியர் ஆற்றலரசு கூறும்போது, எல்லா வகை பணிகளும், பகுதி நேர ஆசிரியர்கள் பயன்படுத்துகின்றனர். அதே நேரம், நாட்டின் 75வது சுதந்திர தினவிழாவில், தேசிய கொடியை விலைக்கு வாங்குவதற்கு கூட, பகுதி நேர ஆசிரியர்கள் தகுதி இல்லை என்பது போல், பள்ளி கல்வி அதிகாரிகள் கூறியிருப்பது கண்டனத்திற்குரியது, அடிப்படை உரிமைக்கு எதிரானது.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.