TN MBBS Rank List Release Date 2023 | எம்பிபிஎஸ், பிஎடிஎஸ் படிப்பு ரேங்க் பட்டியல் எப்போது
TN MBBS Rank List Release Date 2023
தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு இதுவரை 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். தரவரிசை பட்டியல் ஜூைல 16ம் தேதி வெளியிடப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளின் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டிற்கான எம்பிபிஎஸ், பிஎடிஎஸ் இடங்களுக்கு
www.tnhealth.tn.gov.in,
www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த 28ம் தேதி தொடங்கியது.
Read Also: How to Join IIT Madras After 12th in Tami
இணையவழி விண்ணப்பப் பதிவுக்கான அவகாசம் கடந்த திங்கள்கிழமையுடன் (ஜூலை 10ம் தேதி) நிறைவடையவிருந்த நிலையில், மாணவர்கள் கோரக்கையை ஏற்று வரும் 12ம் தேதி மாலை 5 மணி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 24,127 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 11,249 பேரும் என மொத்தம் 35,376 பேர் இதுவரை விண்ணப்பித்துள்ளனர்.
ஜூலை 16ல் தரவரிசை பட்டியல்
மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வரும் 16ம் தேதி வெளியிடப்படும், மத்திய அரசு அகில இந்திய கலந்தாய்வுக்கான தேதியை அறிவுத்தவுடன் தமிழகத்தில் கலந்தாய்வுக்கான தேதி அறிவிக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் சேலத்தில் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.