அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
31.5 C
Tamil Nadu
Saturday, September 23, 2023
அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

How to Join IIT Madras After 12th in Tamil | ஐஐடியில் சேர்வது எப்படி

How to Join IIT Madras After 12th in Tamil | ஐஐடியில் சேர்வது எப்படி

How to Join IIT Madras After 12th in Tamil

இந்தியாவில் உள்ள ஐஐடி கல்வி நிறுவனங்களுக்கு பெரும் பாரம்பரியமும், தனித்த வரலாறும் உண்டு. இரண்டாம் உலக போருக்கு பிறகான இந்தியாவை, தொழில்நுட்பத்தில் மேம்பட்ட நாடாக மாற்றுவதற்கு திறமையான மனிதவளம் தேவைப்பட்டது. அதை உருவாக்க தொடங்கப்பட்டவைதான் ஐஐடி கல்வி நிறுவனங்கள்.

மத்திய அரசின் கீழ் இயங்கும் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனமான ஐஐடி-யில் சேருவது லட்சக்கணக்கான மாணவர்களின் பெரும் கனவாக உள்ளது. மிகப்பெரிய நிறுவனங்களில் வேலைவாய்ப்பு, தொடரும் நன்மதிப்பு, அதீத பயிற்சியும், திறமையும் மிக்க பேராசிரியர்கள் என ஐஐடியில் சேருவதற்கான காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஐஐடி ஒரு கல்வி நிறுவனமாக மட்டுமல்லாமல் உலக அரங்கில் இந்தியவின் பிராண்ட் ஆகவும் இருந்து வருகிறது. ஐஐடி வளாகத் தேர்வுகளில் தேர்வாகும் மாணவர்கள் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.15 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.1.10 கோடி ஊதியம் பெறுவதாக அதன் பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

Read Also: சென்னை ஐஐடியில் புதிய படிப்பு அறிமுகம்

இந்தியாவில் சென்னை, மும்பை, கான்பூர், கரக்பூர், தில்லி, வாரணாசி, ஐதாரபாத் உள்ளிட்ட 23 இடங்களில் ஐஐடி கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் இளநிலை பொறியியல் படிப்புகளில் 10,500க்கு மேற்பட்ட இடங்கள் உள்ளன. செறிவான பாடத்திட்டம், உலகத்தரம் வாய்ந்த ஆசிரியர்கள், சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் தொழில்நிறுவனங்களுடன் உறவு போன்ற பல முக்கிய அம்சங்களை கொண்டுள்ளன. ஐஐடி கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான வழிமுறைகள், ஜேஇஇ நுழைவு தேர்வில் வெற்றி பெறுவதற்கான உத்திகள் உள்ளிட்டவை குறித்த விளக்கங்களை தருகிறார் சென்னை ஐஐடியின் இயக்குனர் வி காமகோடி.

பெருநகரங்களில் செயல்படும் பயிற்சி மையங்களில் சேர்ந்து படித்தால் மட்டுமே ஐஐடி, ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களுக்கான நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற முடியும் என பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த மாயை இன்றும் மாணவர்கள் மத்தியில் தொடருகிறது. முதலில் அதிலிருந்து விடுபட வேண்டியது அவசியம்.

ஆழமான புரிதல், தொடர் பயிற்சி

ஐஐடிக்களில் சேருவதை இலக்காக கொண்டிருக்கும் மாணவர்கள் 9, 10 வகுப்புகளில் அறிவியல், கணிதம் சார்ந்த பாடங்களிலும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் இயற்பியல், வேதியியல், கணிதம் சார்ந்த பாடங்களிலும் உள்ள அடிப்படை விஷயங்கள், கோட்பாடுகளை ஆழமாக புரிந்து கொண்டு கற்க வேண்டும். அவ்வாறு கற்ற விஷயங்களை எந்த அளவுக்கு சரியாக மனதில் உள்ளவாங்கியிருக்கிறோம் என்பதை அறிய மாதிரித் தேர்வு பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

அடிப்படை புரிதல், ஆழ்ந்த கற்றல் ஆகியவை இருந்தால் நீட், ஜேஇஇ உள்ளிட்ட எத்தகைய போட்டித் தேர்வுகளையும் அச்சமின்றி எதிர்கொள்ளலாம். ஐஐடி சேர்க்கைக்கு பிளஸ் 2 பொதுத்தேர்வில் குறைந்தபட்சம் 75 சதவீதம் மதிப்ெபண் பெற்றிருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டு சலுகையுள்ள மாணவர்களுக்கு இது 65 சதவீதமாக உள்ளது. மேல்நிலைக் கல்வியில் கணிதம், இயற்பியலை கட்டாயப் பாடங்களாக கொண்டிருக்க வேண்டும்.

கல்வி கட்டணம் -உதவித்தொகை

நாடு முழுவதும் உள்ள அனைத்து ஐஐடி கல்வி நிறுவனங்களிலும் இளநிலை படிப்புகளுக்கு ஒரே மாதிரியான கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒர் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் கட்டணம் செலுத்தும் வகையில் இருக்கும்.

அதேவேளையில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களின் நலனும் கருத்தில் கொள்ளப்படும். அந்த வகையில் ஆண்டு வருமானம் ரூ. 5 லட்சத்துக்கும் குறைவாக உள்ள குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு 3இல் 2 பங்கு கட்டண குறைப்பு உண்டு. எனவே, அவர்களுக்கான ஆண்டு கட்டணம் ரூ 67,500 ஆக இருக்கும். எஸ்சி., எஸ்டி மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசே செலுத்திவிடுகிறது. அவர்களுக்கு கல்வி கட்டணம் கிடையாது.

இதுதவிர ஐஐடி கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு வங்கிகளில் கல்வி கடன் எளிதாக கிடைக்கிறது. மேலும், மாணவர்களின் தர மதிப்பீடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் கல்வி உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன.

தமிழகத்தில் சிறப்பு திட்டங்கள்

தமிழகத்தில் ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் போன்ற மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் அரசு பள்ளி மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில், இந்த நிறுவனங்களில் இளநிலை பட்டப்படிப்புக்கான முழுசெலவையும் மாநில அரசே ஏற்கிறது. இதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் இந்த திட்டத்தில் பயன்பெற முடியும்.

தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்றாக திகழும் சென்னை ஐஐடியிலும் நாட்டில் உள்ள முன்னணி கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறும் வாய்ப்பு கடைக்கோடி கிராமத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கிடைக்க செய்ய வேண்டும். இதை கருத்தில்கொண்டே தமிழக அரசு சென்னை ஐஐடி சார்பில் அனைவருக்கும் ஐஐடிஎம் திட்்டம் தொடங்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவும் வகையிலும் அவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் அறிவியல் சிந்தனைகளை வளர்க்கும் வகையிலும் நமது பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து உருவாக்கியுள்ள திட்டமே இதுவாகும்.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை ஐஐடி வாயிலாக 250 அரசு மேல்நிலை பள்ளிகளை சேர்ந்த 500 அறிவியல் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மூலமாக ஒரு லட்சம் மாணவர்களுக்கு கற்பித்தல் அளிக்கப்படும். இதற்கு பயன்தரும் வகையில் மின்னணு செய்முறை பெட்டகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதுபோன்று ஆண்டுதோறும் ஒரு லட்சம் மாணவர்களுக்கு அறிவியல் –தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்க சென்னை ஐஐடி திட்டமிட்டுள்ளது.

மேலும் சென்னை ஐஐடி சார்பில் தன்னார்வ அமைப்புகளின் உதவியுடன் தமிழகத்தில் 68 கிராமங்களில் தொடர்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்கள் மூலம் 9 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அறிவியல், தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

புதுமையான சிந்தனைகள் ஊக்குவிப்பு

கிராமப்புறங்களில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் இடையே புதுமையான சிந்தனையை ஊக்குவிக்கும் வகையில் சென்னை ஐஐடி கடந்த ஆண்டு அவுட் ஆப்தி பாக்ஸ் திங்கிங் என்ற பாடத்திட்டத்தை அறிமுகம் செய்தது. இதுதொடர்பாக கணித பாட திட்டத்தின் நிலை 1, நிலை 2 ஆகியவை கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டன. நாட்டிலேயே முதல்முறையாக தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் சுமார் 1.42 லட்சம் மாணவர்கள் பயனடைந்தனர்.

இந்த பாடத்திட்டம் இணையவழியில் கட்டணமின்றி கற்பிக்கப்படுகிறது. இந்த படிப்பை படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு மையங்களில் இறுதி தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும். ேதர்வு எழுதும் மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழும் வழங்கப்படும். தேர்வு எழுதுவதற்கு குறைந்த கட்டணமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள மையங்களில் இத்திட்டம் இலவசமாக வழங்கப்படுகிறது.

கிராமப்புறங்களில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இது பெரிதும் பலனளிக்கும். புதுமையான முயற்சிக்கு வித்தியாசமாக சிந்திப்பது முக்கியது. இளம் மனதை வித்தியாசமாக சிந்திக்க பயிற்றுவிப்பதால் நமது தேசத்துக்கு ஆக்கப்பூர்வமான இளைஞர்களை உருவாக்க உதவும்.

தமிழக அரசின் ஒத்துழைப்பு

ஜேஇஇ தேர்வெழுதும் மாணவர்களில் ஒரு சதவீதத்துக்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே ஐஐடி கல்வி நிறுவனங்களில் சேரும் வாய்ப்பை பெறுகின்றனர். இதை கருத்தில் கொண்டு ஏதாவது ஒரு கல்வித் திட்டம் மூலமாக அனைத்து தரப்பினருக்கும் ஐஐடியில் பயிலும் உருவாக்கி தர வேண்டும் என்பதற்காக ஆண்டுதோறும் புதிய முயற்சிகள், செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த திட்டங்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யமொழி ஆகியோர் பெரும் ஒத்துழைப்பு வழங்கி வருவதால், அடுத்த சில ஆண்டுகளில் இலக்குகள் மேலும் விரிவடையும் என்கிறார் சென்னை ஐஐடி இயக்குனர் வி காமகோடி.

பிரத்யேக இணையதள சேவை

சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்கள், பிரத்யேக இணையதளத்தை தொடங்கி உள்ளனர். ஐஐடியில் சேர விரும்புவோர் நேரடியாக அணுகும் வகையில், வேலை வாய்ப்பு, ஆசிரியர்கள், கல்வியாளர்கள் தொடங்கி வளாக வசதிகள் வரை, சென்னை ஐஐடி தொடர்பான அனைத்து கேள்விகளையும் முன்னாள் மாணவவர்களிடம் கேட்டு உரிய பதில்களை பெறலாம்.

அந்த வகையில் www.askiitim.com என்ற இணையதளத்தில் ஏற்கனவே இடம்பெற்றிருக்கும் கேள்விகளையோ, தங்கள் விரும்பும் கேள்விகளையோ பதிவிடலாம்.

இதுகுறித்து ஐஐடி இயக்குனர் வி காமகோடி கூறியதாவது,

விருப்பம் உடைய மாணவர்கள் சமூக வலைதளங்களுக்கு சென்ற தகவல்களை தேடுகிறார்கள். ஆனால் அங்கு கிடைக்கும் தகவல்கள் சில நேரங்களில் குழப்பத்தையே ஏற்படுத்துகின்றன. நம்பகமான தகவல்களை பெறுவது மிக அவசியம்.

சென்னை ஐஐடி மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள அனைத்து கல்விக்கும் இது தொடக்க ஒரு பயணமாக அமையும். ஐஐடி தொடர்பான கேள்விகளை இந்த இணையதளததில் யார் வேண்டுமானாலும் கேட்கலாம். முன்னாள் மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் குழுவால் அந்த கேள்விகளுக்கு 48 மணி நேரத்தில் பதில் அளிக்கப்படும்.

கேள்வி கேட்பவர்களுக்கான பதில் மின்னஞ்சல் அல்லது வாட்ஸப் மூலமாகவோ அல்லது இரண்டிலுமோ அனுப்பப்படும். பிற மாணவர்கள் பயனடையும் வகையில் அந்த கேள்விகள் – பதில்கள் இடம்பெறும். மேலும் சென்னை ஐஐடி கல்வி நிறுவன வளாகத்தையும் அதன் பல்வேறு துைறகளையும் மெய்நிகர் துறையில் காண முடியும்.

வரவிருக்கும் நிகழ்வுகள் தொடர்பான மேலும் விவரங்களை http://www.askiitm.com/events என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என்றார்.

Related Articles

Latest Posts