You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

Chennai IIT New Course 2023 |சென்னை ஐஐடியில் புதிய படிப்பு அறிமுகம்

Typing exam apply Tamil 2023

Chennai IIT New Course 2023 |சென்னை ஐஐடியில் புதிய படிப்பு அறிமுகம்

Chennai IIT New Course 2023

சென்னை ஐஐடி சார்பில் தனிநபர் தொழில் முறை மேம்பாடு (personal and professional development) எனும் படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை ஐஐடி சார்பில் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பாவது, ஐஐடி அறிமுகம் செய்துள்ள தனிநபர், தொழில்முறை மேம்பாடு எனும் படிப்பில் மாணவர்களின் தொழில்வளர்ச்சிக்கு உதவும் நோக்கில் பாடங்கள், செயல்முறைகள் இடம்பெற்றுள்ளன.

இதன்மூலம் மாணவர்களின் தனித்திறன், தலைமை பண்பு ஆகியவை மேம்படும். மேலும் மாணவர்கள் முழுமையான வளர்ச்சி அடைவதற்காக இந்தக் கல்வி நிறுவனம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் இதன்பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படிப்பில் அனைத்து பொறியியல், இரட்டை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் சேர முடியும். மேலும் ஐஐடியில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் இதை விருப்பப் பாடமாக எடுத்து படிக்கலாம். மாணவர்களின் பல்வேறு விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் தனிப்பட்ட மற்றும் மாற்றத்தக்க திறன்களை உருவாக்க இத்தகைய தொழில்முறை பாடங்கள் உதவுகின்றன. மேலும்,தனிநபர் மற்றும் தொழில்முறை மேம்பாட்டு படிப்பை அறிமுகம் செய்யும் முன்மொழிவுக்கு சென்னை ஐஐடியின் ஆட்சிமன்றக் குழு அண்மையில் ஒப்புதல் அளித்துள்ளது.