TN Latest Government Job இந்த அரசு துறையில் 10,200 காலிபணியிடம் நிரப்ப முடிவு
TN Latest Government Job
தமிழக மின் வாரியத்தில் உதவி பொறியாளர், கள உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 54 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன. இதனால், ஒருவரே இரண்டு, மூன்று பேர் செய்ய வேண்டிய வேலைகளை செய்கின்றனர்.
இதனால் 600 உதவி பொறியாளர், 1,300 கணக்கீட்டாளர், 500 இளநிலை உதவியாளர் – கணக்கு, 2,900 கள உதவியாளர் ஆகிய பதவிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய, 2020 துவக்கத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதற்கு, 2 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்தனர். கொரோனா ஊரடங்கு, சட்டசபை தேர்தலால் தேர்வு நடத்தவில்லை. அந்த தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக இந்தாண்டு ஜூலை 4ல் மின்வாரியம் அறிவித்தது.
PGTRB CV List 2022
காலிபணியிடங்களை விரைந்து நிரப்புமாறு, தொழிற்சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் மின்கம்பம் நடுதல், கேபிள் பதிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் கள பிரிவில் 10,200 பேரை தேர்வு செய்ய மின்வாாியம் முடிவு செய்துள்ளது. இதற்கு அரசிடம் ஒப்புதல் கேட்டுள்ளது.
அதிகாரிகள் கூறியதாவது, அனைத்து பதவிகளுக்கும் மின்வாரியமே தேர்வு நடத்தி ஆட்களை நியமித்தது. தற்போது மின்வாரியம் உட்பட பொதுத்துறை நிறுவனங்களுக்கும் தமிழக அரசு பணியாளர் தேர்வாைணயம் தேர்வு செய்ய உள்ளது.
மின்வாரியத்தில் அவசர தேவையாக கள பணிக்குதான் ஆட்கள் தேவை. எனவே, கள பணிக்கு 10,200 ஊழியர்களை நியமிக்க அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும், தேர்வாணைய அதிகாரிகளை சந்தித்து, ஆட்கள் தேர்வு செய்துதர வலியுறுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
(Source : Dinamalar)