அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
29.3 C
Tamil Nadu
Sunday, December 3, 2023

PGTRB CV List 2022 | Post Graduate Assistants | Physical Education Directors Grade – I | Computer Instructors Grade -I

PGTRB CV List 2022 | Post Graduate Assistants | Physical Education Directors Grade – I | Computer Instructors Grade -I

PGTRB CV List 2022

ஆசிரியா் தேர்வு வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியருப்பதாவது, 2020-2021ஆம் ஆண்டு முதுகலை பட்டதாரி ஆசிரியர்/ உடற்கல்வி இயக்குனர் நிலை – 1/ கணினி பயிற்றுநர் நிலை – 1நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை எண் 01/2021 ஆசிரியர் தே்ாவு வாரியத்தில் 9.9.2021 அன்று வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து 12.2.2022 முதல் 20.02.2022 வரை கணினி வழித்தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் 4.7.2022 அன்று வாரியத்தில் வெளியிடப்பட்டன.

25.8.2022 நாளிட்ட ஆசிரியர் தேர்வு வாரிய பத்திரிக்கை செய்தியில் பணி நாடுநர்கள் தங்களது தமிழ்வழியில் பயின்றதற்கான சான்றிதழ்களை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் வழியாக 26.8.2022 முதல் 30.8.2022 வரை பதிவேற்றம் செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Group VII A Notification

பணி நாடுநர்கள் விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள் / ஆவணங்கள் மற்றும் கூடுதலாக பதிவேற்றம் செய்யப்பட்ட தமிழ் வழி பயின்றதற்கான சான்றிதழ்களின் அடிப்படையில் பணி நாடுநர்கள் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கீழ்கண்ட பாடங்களுக்கு 1:2 என்ற விகிதாச்சாரப்படி சான்றிதழ் சரிபார்ப்பிற்கான பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

PGTRB CV LIST LINK

S.NO Subject Download file
1Tamil Click Here
2English Click Here
3MathematicsClick Here
4Physics Click Here
5Chemistry Click Here
6Botany Click Here
7Zoology Click Here
8CommerceClick Here
9EconomicsClick Here
10HistoryClick Here
11GeographyClick Here
12Political ScienceClick Here
13Home ScienceClick Here
14Bio chemistryClick Here
15Indian CultureClick Here
16Physical EducationClick Here
17Computer ScienceClick Here

சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ள பணிநாடுநர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கான அழைப்பு கடிதம், ஆளறிச் சான்றிதழ் படிவம் மற்றும் பிற இணைப்பில் கண்டுள்ள படிவங்கள் ஆகியவை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும். தங்களது அழைப்பு கடிதம், ஆளறிச் சான்றிதழ் மற்றும் பிற இணைப்பில் கண்டுள்ள படிவங்கள் ஆகியவை டிஆர்பி இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அழைப்பு கடிதம் பிற வழிகளில் அனுப்பப்படமாட்டாது என பணி நாடுநர்களுக்க தெரிவிக்கப்படுகிறது.

பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு அழைப்பு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டவாறு தங்களது அனைத்து அசல் சான்றிதழ்கள், ஆதார் ஆகியவற்றுடன் அதனுடைய Self Attested Copies மற்றும் ஆளறிச் சான்றிதழ் ஆகியவற்றினை சான்றிதழ் சரிபார்ப்பின்போது கொண்டு வருமாறு தெரிவிக்கப்படுகிறது. சான்றிதழ் சரிபார்ப்பிற்கு குறிப்பிட்ட தேதியில் நேரில் வருகை புரியாத விண்ணப்பதாரர்கள் அவர்கள் தகுதியான மதிப்பெண் பெற்றிருப்பினும் அடுத்தகட்ட பணித்தெரிவிற்கு பரிசீலிக்கமாட்டார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

விண்ணப்பதாரர்கள் 1:2 என்ற விகிதத்தில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவதாலும் அவர்களின் சான்றிதழ்கள்/ ஆவணங்கள் சரிபார்க்கப்படுவதாலும் மட்டுமே அன்னாரது இறுதி தற்காலிக தெரிவுக்கு உத்தரவாதம் இல்லை என தெரிவிக்கப்படுகிறது. மேற்கண்ட பாடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பிற்கான இடம் மற்றும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

மூன்று நாள் அவகாசம்

சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் சார்ந்த கோரிக்கைகளை ஆசிரியர் தேர்வு வாரிய URL https://forms.gle/ZUYC2Ud5wxcapDku6 வழியாக இப்பட்டியல் வெளியிடப்பட்ட நாள் முதல் மூன்று தினங்களுக்கு அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது. ஆட்சேபனை/மனு பிற வழியில் அனுப்பினால் பரிசீலிக்கப்படமாட்டாது என தெரவிக்கப்படுகிறது. மேலும் முதுகலை ஆசிரியர் பணியிடத்திற்கான பணிநாடுநர்கள் டிஆர்பி இணையதளத்தில் மற்றும் பத்திரிக்கை செய்தியினை தொடர்ந்து கவனிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Posts