அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
29.3 C
Tamil Nadu
Sunday, December 3, 2023

TNPSC Group VII A Notification |Executive Office Grade I Counselling announcement  

TNPSC Group VII A Notification |Executive Office Grade I Counselling announcement  

TNPSC Group VII A Notification

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சற்று முன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது

தமிழ்நாடு இந்து சமய அறநிலைய சார்நிலை பணிகளில் தொகுதி VII A பணியில் அடங்கிய செயல் அலுவலர் நிலை ஒன்று பதவிக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 21.1.2022 நாளிட்ட அறிவிக்கை எண் வாயிலாக விண்ணப்பங்கள் கோரியிருந்தது. இப்பதவிக்கான எழுத்துத்தேர்வு கடந்த 23.4.2022 முற்பகல் மற்றும் பிற்பகல் மற்றும் 24.4.2022 முற்பகல் ஆகிய நாட்களில் நடைபெற்றது தொடர்ந்து 18.8.2022 முற்பகல் அன்று நேர்முகத் தேர்வு நடைபெற்று, ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது.

TNPSC REVISED SCHEME AND SYLLABUS PDF 2022

இப்பதவிக்கான கலந்தாய்வு சென்னை, தேர்வாணைய சாலையில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் 5.9.2022 அன்று முற்பகல் நடைபெற உள்ளது. மேற்படி கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் தரவரிசை பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மேற்படி கலந்தாய்விற்கான தேதி, நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய அழைப்பு கடிதத்தினை தரவரிசை பட்டியலில் உள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வாணைய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அதற்கான விவரம் எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலந்தாய்விற்கான அழைப்பாணை தனியே தபால் மூலம் அனுப்பப்படமாட்டாது.

விண்ணப்பதாரர்கள் கலந்தாய்விற்கு காலி பணியிடம், வகுப்பு, இன சுழற்சி ஆகியவற்றிற்குட்பட்டு தரவரிசையின்படி அனுமதிக்கப்படுவர். மேலும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் மேற்படி கலந்தாய்விற்கு குறித்த தேதி மற்றும் நேரத்தில் வர தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Posts