TN Half Yearly Examination 2022 | அரையாண்டு தேர்வு கால அட்டவணை 2022
TN Half Yearly Examination 2022
பள்ளி கல்வித்துறை சற்று முன் 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு கால அட்டவணையை அறிவித்துள்ளது.
அதன்படி, 6 முதல் 10ம் ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு டிசம்பர் 16ம் தேதி தொடங்குகிறது. இத்தேர்வு டிசம்பர் 23ம் தேதி நிறைவடைகிறது. அதேபோன்று, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு டிசம்பர் 15ம் தேதி துவங்கி, டிசம்பர் 23ம் தேதியுடன் நிறைவடைகிறது.
Read Also: பிழையில்லா மதிப்பெண் சான்றிதழ் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்
6 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு காலை 9.30 மணி முதல் 12மணி வரை நடக்கிறது. 7ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு மதியம் 1.30 மணிக்கு துவங்கி, 4 மணி வரை நடக்கிறது. 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மதியம் 1.30 மணி முதல் மாலை 4.45 மணி வரை நடக்கிறது.10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு காலை 9.30 மணி துவங்கி, 12.45 மணி வரை நடக்கிறது.
11ம் வகுப்பு மாணவர்களுக்கு மதியம் 1.30 மணி முதல் மாலை 4.45 மணி வரை நடக்கிறது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 9.30 மணி முதல் 12.45 மணி வரை நடகிறது. இதில் 15 நிமிடங்கள் வினாத்தாள் வாசிக்க மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.