TN graduates waiting for Government Job | அரசு வேலைக்காக 67.75 லட்சம் பேர் காத்திருப்பு
TN graduates waiting for Government Job
கடந்த ஆண்டு நிலவரப்படி தமிழகத்தில் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து அரசு வேலைக்காக காத்திருப்போரின் எண்ணிக்கை 67.75 லட்சம் பேர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட தகவல், தமிழகத்தில் பள்ளி படிப்பில் தொடங்கி, கல்லூரி படிப்பு முடித்தவர்கள் வரை தங்களது கல்வி விவரங்களை அரசு வேலைக்காக பதிவு செய்து வருகின்றனர். அதன்படி, 67,75,250 பேர் பதிவு செய்துள்ளனர். அவர்களில் ஆண்கள் 36,13,327, பெண்கள் 31,60,648, மூன்றாம் பாலினத்தவர் 275.
Read Also: Temporary Teacher Job in Government Schools
கல்லூரி படிப்பை முடித்து 30 வயதுக்குள் இருப்பவர்களே அதிகம். 18 வயதுக்கு உட்பட்டவர்கள் 19,09,325. 19 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் 27,95, 275, 31 வயது 45 வயதுக்கு உட்பட்டவர்கள் 18,34,994 பேர். 46 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் 2,29,978. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 5,675 பேர்.
ஒட்டுமொத்தமாக பதிவு செய்த 67,75,250 பேரில் மாற்றுத்திறனாளியாக இருப்பவர்கள் எண்ணிக்கை 1,43,396. இவர்களில் ஆண்கள் 95,247, பெண்கள் 48,149 பேர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.