You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

Temporary Teacher Job in Government Schools | தற்காலிக ஆசிரியர் பணி

Typing exam apply Tamil 2023

Temporary Teacher Job in Government Schools | தற்காலிக ஆசிரியர் பணி

Temporary Teacher Job in Government Schools

இல்லம் தேடி கல்வி சிறப்பு கல்வி அலுவலர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,

1.கரோனா காலத்தில் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பு மற்றும் இடைவெளியை சரிசெய்வதற்காக தொடங்கப்பட்ட இல்லம் தேடிக் கல்வித் திட்டம் மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது. இத்திட்டப் பணிகளை மேற்கொள்ளுவதற்காக மாவட்ட அளவில் ஒரு ஆசிரியர் ஒருங்கிணைப்பாளரும் ஒன்றிய அளவில் ஒரு ஆசிரியர் ஒருங்கிணைப்பாளரும் செயல்பட்டு வருகின்றனர்.

2. மாவட்ட ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்களின் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்காத வகையில் அவர்கள் பணிபுரியும் பள்ளிகளில் தேவைப்படும் பட்சத்தில் தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு உடனடியாக மாற்று ஏற்பாடு செய்திட திட்டமிடப்பட்டுள்ளது.

Read Also: ஆசிாியர் பணி தகுதி – நீதிமன்றம் உத்தரவு

3. இதற்காக ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் பணியாற்றும் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் தேவையுள்ள பள்ளிகள் மாவட்டங்களிலிருந்து பெறப்பட்டு இணைப்பில் கண்டுள்ளவாறு கணக்கிடப்பட்டுள்ளது. இவ்வாசிரியர்கள் பணியிடங்களில் பள்ளி மேலாண்மைக் குழுக்களின் மூலம் தற்காலிக ஆசிரியர்களை இக்கல்வியாண்டு முடியும் வரை ஜனவரி 2023 முதல் ஏப்ரல் 2023 வரைக்கும் 4 மாதங்களுக்கு பணி அமர்த்தப்பட வேண்டும்.

4. தற்காலிக பணி அமர்வு குறித்து கீழ்க்கண்ட வழிமுறைகள் பின்பற்ற வேண்டும்.

I ஜனவரி 2023 முதல் ஏப்ரல் 2023 வரைக்கும் 4 மாதங்களுக்கு மட்டும் தற்காலிகமாக பள்ளி மேலாண்மைக் குழுவின் வாயிலாக பார்வை 3 யில் காணும் செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது போன்று தேர்வு செய்யப்பட வேண்டும்.

II சம்பந்தப்பட்ட பள்ளியின் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர் தகுதியுடையவராயிருப்பின் அளிக்கப்படவேண்டும். அவருக்கு முன்னுரிமை

III. இவ்வாறு பள்ளி மேலாண்மைக் குழுவின் வாயிலாக தற்காலிகமாக நிரப்பப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.7500/- பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.10,000/- வீதம் மதிப்பூதியம் என தெரிவிக்கப்பட வேண்டும்.

IV. இணைப்பில் கண்டுள்ள ஆசிரியர்களில் பட்டதாரி ஆசிரியராயிருப்பின் அவர்களுக்கு பதிலாக அதே பாடப்பிரிவில் கற்றல் கற்பித்தல் தொய்வின்றி நடப்பதற்காக தற்காலிகமாக அமர்த்தப்பட வேண்டும். ஆசிரியர்கள் பணி

V. இல்லம் தேடிக் கல்வி பணிகளில் ஈடுபட்டிற்கும் ஆசிரியர்கள் தங்கள் பணியை முடித்து எப்போது பள்ளிக்கு திரும்பினாலும் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் நிரப்பப்படும் தற்காலிக ஆசிரியர்கள் உடனடியாக பணிவிடுப்பு செய்யப்பட வேண்டும்.

தற்காலிக ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கும் பணியினை ஜனவரி 9 ஆம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும்.

உாிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.