You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

TN Government School Students Pass Details on NEET | நீட் தேர்வு அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி

TRUST Exam Hall Ticket Download link 2023

TN Government School Students Pass Details on NEET | நீட் தேர்வு அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி

TN Government School Students Pass Details on NEET

நீட் தேர்வில் தமிழக அரசு பள்ளிகளைச் சேர்ந்த 3,982 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

நீட் தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 13ம் தேதி வெளியாகின. நாடு முழுவதும் 11,45,976 மாணவா, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் பொருத்தவரை 78,693 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை மாணவர் ஜே.பிரபஞ்சன் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளிவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். முதல் 10 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த 4 பேர் இடம் பிடித்துள்ளனர்.

Read Also: Medical Course Details in Tamil

இந்த நிலையில் நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விவரங்களை பள்ளி கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது. அதன் விவரம், நிகழாண்டு நீட் தேர்வை அரசு பள்ளி மாணவர்கள் 12,997 பேர் எழுதினர்.

அதில் 3,982 (30.67 சதவீதம்) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்தாண்டு விட இது சுமார் 4 சதவீதம் அதிகமாகும். மாவட்ட அளவிலான தேர்ச்சியில் சேலம் முதலிடத்தில் உள்ளது. அங்கு 519 பேர் நீட் தேர்வில் வெற்றிபெற்றுள்ளனர்.

இதுதவிர கிருஷ்ணகிரியில் 235 பேரும், ஈரோடு, கள்ளக்குறிச்சியில் தலா 209 பேரும், காஞ்சிபுரத்தில் 202 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறைந்தபட்சமாக தென்காசியில் 335 பேர் தேர்வில் பங்கேற்றதில் 9 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.