You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

TN Government School Admission 2023 | அரசு பள்ளி அட்மிஷன் 2023 | அரசு பள்ளி மாணவர் சேர்க்கை கொண்டாட்டம்

Fee details in tamil

TN Government School Admission 2023 | அரசு பள்ளி அட்மிஷன் 2023 | அரசு பள்ளி மாணவர் சேர்க்கை கொண்டாட்டம்

TN Government School Admission 2023

பள்ளி கல்வி ஆணையர் க.நந்தகுமார் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,

2023-2024ஆம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரித்திட ஏப்ரல் 17ம் தேதி முதல் ஏப்ரல் 28ம் தேதி வரை மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட வேண்டும். இவ்விழிப்புணர்வு பேரணிக்கு, அரசு பள்ளிகளை கொண்டாடுவோம் நிகழ்விற்கு பயன்படுத்தியவாறு வாகனம் ஒன்றை ஒவ்வொரு மாவட்டத்திலும் உருவாக்க வேண்டும். இவ்வாகனம், 50 பள்ளிகளுக்கு ஒன்று என்ற விகிதத்தில் மாவட்ட அளவில் தயார் செய்யப்பட வேண்டும். இவ்வாகனத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான அரசின் நலத்திட்டங்கள், கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள், மன்ற செயல்பாடுகள், கல்விசார் இணை செயல்பாடுகள் சார்பான விவரங்கள் ஏற்படுத்த வேண்டும்.

இவ்விழிப்புணர்வு பேரணியில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களும் பங்கு பெற வேண்டும். இரண்டு ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் பயின்று பல்வேறு போட்டிகளில் வென்று வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்ற விவரங்களை பாடல்களாக வழங்க முயற்சி செய்ய வேண்டும்.

Read Also: Government School Admission Form PDF

மேலும், அரசு பள்ளிகளில் காற்றோட்டமான வகுப்பறைகள், குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, தமிழ் பிரிவுகளுடன் துவங்கப்பட்டுள்ள ஆங்கில வழி பிரிவுகள் மற்றும் நன்கு பயிற்சி பெற்ற தகுதியான ஆசிரியர்கள் பணியில் உள்ளனர் என்பதனையும் மாணவர்களுக்கு அரசு வழங்கும் நலத்திட்டங்கள், எண்ணும் எழுத்தும் கற்பித்தல் முறை மற்றும் இல்லம் தேடி கல்வி சார்ந்து விழிப்புணர்வு பேரணி நடத்திட வேண்டும்.

விழிப்புணர்வு பேரணி மற்றும் பிரச்சாரமானது பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டும். மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்கள் மற்றும் மக்கள் குடியிருப்புகள் அதிக உள்ள இடங்கள் இவற்றில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

அனைத்து ஆசிரியர்களையும் கொண்டு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி மாணவர் எண்ணிக்கையை இந்த கல்வியாண்டில் உயர்த்த அறிவுறுத்த வேண்டும்.

அரசு பள்ளிகளில் தரமான இலவச கல்வி வழங்கப்படுவதை பொதுமக்கள் அனைவரும் அறியும் வண்ணம் பேனர்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் மாணவர்களின் பெற்றோர்களுக்கு தெரியப்படுத்தி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்.

அரசு பள்ளியில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அரசு பணியில் 20 சதவீதம் முன்னுரிமை

6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி பயில 7.5 சதவீதம் முன்னுரிமை

பெண் கல்வி இடைநிற்றலை தவிர்க்க அரசு பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு உயர் கல்வி பயில மாதந்தோறும் ரூ 1000

மேற்படி முன்னுரிமை குறித்த விழிப்புணர்வினை பெற்றோா்களுக்கு ஆசிரியர்கள் எடுத்துக்கூறி மாணவர் சேர்க்கையினை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பள்ளி கல்வித்துறை நல திட்டம்

பள்ளி குழந்தைகளுக்கு அரசு வழங்கும் விலையில்லா பாடநூல்கள், பாடக்குறிப்பேடுகள், நான்கு இணை சீருடைகள், புத்தகப்பை, கிரையான்ஸ், வண்ணப் பென்சில்கள், காலணிகள், நில வரைபடம், கணித உபகரணப் பெட்டி, பேருந்து பயண அட்டை, ஆதி திராவிட நல ஊக்கத்தொகை, மிகவும் பிற்படுத்தப்பட்டோர்/சீர்மரபினர் வகுப்பு மாணவிகளுக்கு ஊக்கத்தொகை, கிராமப்புற பெண்கள் கல்வி ஊக்கத்தொகை, தூய்மை பணியாளர் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை, திறனறித்தேர்வு ஊக்கத்தொகை, விபத்தில் வருவாய் ஈட்டும் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கான உதவித்தொகை, கோவிட் 19ல் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான உதவித்தொகை, மாற்றுத்திறனாளி குழந்தைகள் சலுகைகள் பெறுவதற்கான அடையாள அட்டை, மருத்தவ முகாம்கள், ஊக்கத்தொகை, காலை சிற்றுண்டி, சத்தாண உணவுடன் வாரம் 5 முட்டை வழங்குதல், உண்டு உறைவிட பள்ளிகளில் வழங்கப்படும் சலுகைகள் பற்றி பள்ளி வழியாக சுவரொட்டிகள்/துண்டு பிரசுரங்கள் மூலம் விரிவான விளம்பரம் செய்யப்பட வேண்டும்.

மாணவர் சேர்க்கை கொண்டாட்டம் என்னும் இந்நிகழ்விற்கான செலவின தொகை ஒருங்கிணைத்து பள்ளி கல்வி இயக்கத்திலிருந்து மாவட்டங்களுக்கு வழங்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.