You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

TN ESLC EXAM 2023 | TN ESLC EXAM TIME TABLE 2023 | எட்டாம் வகுப்பு பொது தேர்வு 2023  

Typing exam apply Tamil 2023

TN ESLC EXAM 2023 | TN ESLC EXAM TIME TABLE 2023 | எட்டாம் வகுப்பு பொது தேர்வு 2023

TN ESLC EXAM 2023

ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை வரவேற்றல்

ஆகஸ்ட் 2023ல் நடைபெற உள்ள தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு 1.8.2023 அன்று 12 ½ வயது பூா்த்தி அடைந்த தனித்தேர்வர்கள் 20.6.2023 பிற்பகல் 28.6.2023 வரை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள சேவை மையங்களுக்கு (Service Centre) நேரில் சென்று ஆன்லனை் மூலம் பதிவு செய்துகொள்ளலாம்.

தேர்வு கட்டண விவரம்

விண்ணப்பத்துடன் தேர்வு கட்டணம் ரூ.125 மற்றும் ஆன்லைன் பதிவு கட்டணம் ரூ 70 மொத்தம் என ரூ.195 ஐ பணமாக சேவை மையங்களில் நேரடியாக செலுத்தலாம்.

Read Also: ஸ்டெம் கல்வி என்றால் என்ன

மேற்குறிப்பிட்ட நாட்களில் விண்ணப்பிக்க தவறியவர்கள் 30.6.2023 மற்றும் 1.7.2023 ஆகிய நாட்களில் தேர்வு கட்டணத்துடன் தட்கல் விண்ணப்ப கட்டணத்தொகையாக ரூ.500 வரை கூடுதலாக பதிவு செய்துகொள்ளலாம்.

விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டியவை

முதன்முறையாக தேர்வு எழுத விண்ணப்பிப்பவர்கள்

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பத்துடன் சான்றிடப்பட்ட தங்களது பள்ளி மாற்றுச்சான்றிதழ் நகல்/ பள்ளி பதிவுத்தாள் நகல்/ பிறப்பு சான்றிதழ் நகல் இவற்றில் ஏதேனும் ஒன்றினை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

ஏற்கனவே எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி தோல்வி அடைந்த பாடத்தை தேர்வு எழுத விண்ணப்பிப்பவர்கள்

ஏற்கனவே தேர்வு எழுதி பெற்ற மதிப்பெண் சான்றிதழின்/ சான்றிதழ்களின் நகல்களை கண்டிப்பாக இணைத்து சமர்பிக்க வேண்டும்.

தனித்தேர்வர்கள் ரூ.42க்கான அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட, பின்கோடுடன் கூடிய சுயமுகவரியிட்ட உறை ஒன்றினை விண்ணப்பத்துடன் இணைத்து சமர்பிக்க வேண்டும்.

ஆன்லைன் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

இத்தேர்விற்கான விரிவான தகவல்களை மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் காணலாம்.

TN ESLC EXAM TIME TABLE 2023

தேதிகிழமைநேரம்பாடம்
7.8.2023திங்கள்காலை 10 மணி முதல் 12 மணி வரைதமிழ்
8.8.2023செவ்வாய்காலை 10 மணி முதல் 12 மணி வரைஆங்கிலம்
9.8.2023புதன்காலை 10 மணி முதல் 12 மணி வரைகணிதம்
10.8.2023வியாழன்காலை 10 மணி முதல் 12 மணி வரைஅறிவியல்
11.8.2023வெள்ளிகாலை 10 மணி முதல் 12 மணி வரைசமூக அறிவியல்